Header Ads



அமெரிக்க அதிகாரியை சந்திக்க மறுத்த, மஹிந்த ராஜபக்ஸ

அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா பிஸ்வாலை சந்திக்க, மகிந்த ராஜபக்ச மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மகிந்த ராஜபக்சவை நிஷா பிஸ்வால், சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்குவதற்கு, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டது. 

அமெரிக்கத் தூதரகம் சந்திப்புக்கான அனுமதியைப் பெறுவதற்கு திரும்பத் திரும்ப பலமுறை முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அது தோல்வியில் முடிந்தது. 

நிஷா பிஸ்வாலை மகிந்த ராஜபக்ச சந்திக்காமைக்கு, கடந்தவாரம் அவர் இறுக்கமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்ததே காரணம் என்று, அதிபர் செயலக வட்டாரங்கள் கூறின. 

எனினும், கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள், திட்டமிட்டே இந்தச் சந்திப்புத் தவிர்க்கப்பட்டதாக நம்புகின்றன. 

பிஸ்வால் மூலம் அமெரிக்க அரசாங்கம் தம்மிடம் நேரடியாக கடுமையான செய்தி ஒன்றை பரிமாறிக் கொள்வதை தவிர்க்கவே மகிந்த ராஜபக்ச, அவரைச் சந்திக்காமல் விட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

அமெரிக்காவின் இறுக்கமான நிலைப்பாட்டை பிஸ்வால் கொழும்பில் தமது சந்திப்புகளின் போது வெளிப்படுத்தியிருந்தார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

No comments

Powered by Blogger.