முத்தமிட்டதால் மாட்டிக்கொண்ட நகைத்திருடன்
பிரான்சில் நகையை திருடிய திருடர்கள் நகைக்கடையின் உரிமையாளரை முத்தமிட்டு சென்றதால் டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் போலிசாரிடம் பிடிபட்டனர்.
பிரான்சில் நகைக்கடை நடத்தி வரும் 56 வயது பெண்ணின் வீட்டிற்குள் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள் நுழைந்தனர். அந்த பெண்ணை கயிற்றால் கட்டிவைத்து அவர் மீது பெட்ரோலை ஊற்றினர். பின் நகைக்கடையின் சாவியை தருமாறும் இல்லையென்றால் கொளுத்தி விடுவோம் என்றும் மிரட்டினர். உயிருக்கு பயந்த அந்த பெண் கடைச்சாவியை திருடனிடம் கொடுத்தார்.
ஒரு திருடன் மட்டும் கடைக்குச் சென்று பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து விட்டு வந்தான். பின் அந்த பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு இரண்டு கொள்ளையர்களும் தப்பிச் சென்றுவிட்டனர்.
போலீசாருக்கு தகவல் தெரிவித்த அந்த பெண் நடந்த சம்பவத்தை பற்றி கூறினார். தடவியல் நிபுணர்கள் பெண்ணின் கன்னத்தில் பொடியை தூவி முத்தமிட்ட தடயத்தை டி.என்.ஏ சோதனைக்கு அனுப்பியதில் தேசிய மரபணு தகவல் தொகுப்பில் அத்திருடனை பற்றிய விவரம் இருப்பதை அறிந்து அவனை கைது செய்தனர்.
ஏற்கனவே அவன் பிரான்சின் நைம்ஸ் ஜெயிலில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசாரிடம் பிடிபட்ட திருடன் கொள்ளை தொடர்பான அதிர்ச்சியிலிருந்து அப்பெண் மீள்வதற்காகவே அவரது கன்னத்தில் முத்தமிட்டதாக தெரிவித்தான்.
Post a Comment