பேஸ்புக் மரண சாசனமா ? உயிரின் மூலத்தைப் பாதிக்குமா ?
(றிசானா பசிர்)
இன்று சமுக வலைத்தளங்கலில் பேஸ் புக் முதலிடத்தைப் பிடித்துக் கொண்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ”வலைத்தள வல்லரசு” என்ற சிறப்புப் பட்டமும் இதற்கு உண்டு. பல நன்மைகளை வழங்கிய போதிலும் சில கேடுகளையும் விளைவிக்கின்றது. ஒரு விடயத்தை ஒரு கோணத்திலிருந்து நோக்கவும் பார்க்கவும் கூடாது.சிந்திக்கவும் போடாது. சில கில்லாடிகள் திருட்டுத்தனமாக மாணவிகளை படமெடுத்து பேஸ்புக்கில் உங்களை ”மோடல்கள்” ஆக்கலாம். இது அவதுாறுக்கு சமமானது. சட்டத்தில் அவதுாறுக்கு [defame] தண்டனை உண்டு.
அன்புள்ள மாணவிகளே ! உங்கள் புகைப்படம் பேஸ் புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டால் அதற்கான பதிலடி தற்கொலையல்ல. இது முட்டாள்களின் செயல். ஒரு கோழைத்தனம். முடிவெடுக்கத்தெரியாத தனம். எமது ஜனாதிபதி அடிக்கடி சொல்லும்பதம் ”தலைமைத்துவப் பண்பு”. இது உங்களுக்கு கிடையாது என்றுதான் அர்த்தம்.
உயர்தரம் கற்று முடியுமட்டும் மாணவ சமுகம் முகநுாலை [ FACEBOOK ] மடித்து வையுங்கள். ஏனென்றால் கட்டுப்பாடற்ற மனத்தால் எதையும் சாதிக்க முடியாது. எதையேனும் சாதிக்க நினைத்தால் நிறையக் கட்டுப்பாடுகள் விதித்தே ஆக வேண்டும்.ஒரு பழக்கத்திற்கு அடிமையானால் அதிலிருந்து விடுபடுவது மிகக்கடினம். சுறுசுறுப்பான இணையத்துக்கு 24 மணி நேரமும் போதாது. இரண்டு முயல்களைத் துரத்தினால் ஒரு முயலையும் பிடிக்க முடியாது.
இன்றைய பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்குப் பாடங்கள் தவிர்த்து ஆசிரியர்கள் வேறு எதாவது கற்பிக்க வேண்டும் என விரும்புகிறார்களா?'' ''இன்றைய பெற்றோர் விரும்புகிறார்களோ இல்லையோ, ஒரு பிரபலமான அப்பா தன் மகனின் பள்ளி ஆசிரியருக்கு எழுதிய இந்தக் கடிதத்தின் சுருக்கத்தைப் படித்துப் பாருங்கள்...
“'உழைத்துச் சம்பாதிக்கும் ஒரு டொலர், உழைக்காமல் சம்பாதிக்கும் ஐந்து டொலரைவிட மதிப்பானது என்று அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். அவனுக்குத் தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக்கொடுங்கள். அவனுக்குப் பொறாமைக் குணம் வந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். மௌனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தையும் எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதையும் புரியவையுங்கள். புத்தகம் என்னும் அற்புத உலகின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். ஏமாற்றுவதைவிடத் தோல்வி அடைவது மேலென்று புரியவையுங்கள். மென்மையானவர்களிடம் மென்மையாகவும் முரடர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்குப் பயிற்சி கொடுங்கள். கும்பலோடு கும்பலாகக் கரைந்துவிடாமல் எந்தச் சூழலிலும் தனது சொந்தகாலில் நிற்கும் நடையைப் பயின்று கொடுங்கள்.”
விமான விபத்து ஒன்று நிகழ்ந்து விட்டால் விமான சேவையை நிறுத்தி விமான நிலையத்தை மூடுவதில்லை.இனி இந்த நாட்டில் பேஸ்புக் விபத்து நிகழக்கூடாது. மாணவிகளின் புகைப்பட பதிவேற்றம் இத்துடன் நின்றுவிடவில்லை. இந்த மாணவியை தற்கொலைக்கு இட்டுச்சென்ற அந்த அதிபரின் தகாத வார்த்தைகளையும் அடாவடித்தனத்தையும் வன்மையாக கண்டிக்கின்றேன். எல்லோருக்கும் இன்பமும் வரும் துன்பமும் வரும்.இந்த மரணத்தையாவது ஒரு திருப்புமுனையாக வைத்து மாணவ சமுகத்திற்கு விழிப்புணர்வுஊட்டுங்கள் .பெண் பிள்ளைகளுக்கு வீரத்தைக் கற்றுக்கொடுங்கள். அலைஅலையாகத் தடைகள் வந்தாலும் மலைமலையாகத் தடங்கல் வந்தாலும் எதிர் நீச்சல் அடிக்க கற்றுக் கொடுங்கள். மனஅழுத்தம், குற்றஉணர்வு, இயலாமை, வெட்கம், பொருளாதாரச்சிக்கல் போன்ற பல்வேறு காரணங்கள் ஒருவரை தற்கொலைக்குத் துாண்டலாம். அந்த மாணவியின் தற்கொலைக்கு துாண்டியாக அந்த ஆசிரியரின் வன்மையான மானசீனமற்ற வார்த்தைகள் அமைந்திருக்கலாம். பேஸ்புக் ஒரு தற்கொலைக் காரணியாக இனி அமையக்கூடாது
தற்கொலைக்குப் புறப்பட்ட ஒரு மனிதனை வைரமுத்து தடுத்து நிறுத்துகிறார்… எப்படித் தெரியுமா? . ”ஏ மனிதா உனது பயணம் ஒரு விந்தின் புறப்பாடல்ல………..நீ சாதிக்க வேண்டியவை ஏராளம்……
விவேகானந்தர் என்ன கூறுகிறார்…………
” நீ ஒவ்வொரு நாளும் ஒரு பிரச்சினையைச் சந்திக்காவிட்டால் நீ தப்பான பாதையில் பயணிக்கின்றாய்” என்றுதான் அர்த்தம்”. எனவே எந்தப் பிரச்சினையானாலும் தலைநிமிர்த்தி நெஞ்சுயர்த்தி தீர்வு காணுங்கள்.
Post a Comment