Header Ads



முசலி கிராம மக்களுக்கு விரைவில் காணி அனுமதிப்பத்திரம் கிடைக்குமா..?

(அபூதனா)

முசலிக்கிராம மக்களுக்கு வழங்கப்படவுள்ள காயாக்குழி அனுமதிப்பத்திரங்களில் உரிய பயனாளிகளிடம் கையொப்பம் பெறப்பட்ட பின்னர்.பின்னுருத்தாளியின் பெயரும் பெறப்பட்டு ஏறத்தாழ 06 மாதங்கள் கழிந்தும் இன்னும் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன.இது ஏன்? முசலிக்கிராம மக்களை எதுவும் தெரியாத பாமர மக்கள் என கருதிவிட்டனரா?

காணித்துண்டுகள் வெளிப்படையான குலுக்கல் முறையில் வழங்கப்பட வேண்டும்.இதுதான் காணிச் சட்ட சுற்றுநிருபம்,இதை மீறி தாம் விரும்பியவாறு துண்டுகளைப்;பங்கிடுவது,ஏற்றுக்கொள்ள முடியாது.இவ்விடயத்தில் ஏதோ சக்தி தொழிற்பட்டுள்ளது.என நாம் நம்புகிறோம்.இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எம் மக்களால் எடுக்க முடியும்.

மீளக்குடியேறுவோர் தமக்கான வீடுகளைக் கட்டுவது,முசலிக் கிராமத்திலா அல்லது காயாக்குழியிலா என்பதைத்தீர்மானிப்பது அம்மக்களின் சுயவிருப்பமே,இதில் யாரும் பலவந்தப்படுத்துவதையோ,எவ்வகையிலேனும் அச்சுறுத்துவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது.அரச காணிகிடைக்கும் காயாக்குழியில் வீடுகளைக் கட்டினால்த்தான் காணி உங்களுக்குக் கிடைக்கும்.இல்லையென்றால் காணி பறி போய் விடும் என்ற உறுதிப்படுத்தப்படாத செய்தியும் இம்மக்களிடையே பரவி வருவதை அறிய முடிகிறது.

          ஏனைய கிராம மக்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி காணி அனுமதிப் பத்திரங்கள் விரைவாக வழங்கப்படுகிறது.ஏன் முசலிக் கிராம மக்களுக்கு மட்டும் இவ்வாறான அநீதிகள் இடம்பெறுகின்றன.காணிகள் தொடர்பான சட்டதிட்டங்களை அனைத்து மக்களும் 'ட்ரான்ஸ்பெரன்சி இன்டநெசனல் ஆல் வெளியிடப்பட்ட காணி தொடர்பான வெளியீடுகள் ,வட கிழக்கு மகாண காணி  திணைக்களத்தால் வெளியிடப்பட்ட காணிச் சட்டக்கோவை போன்றவற்றை தேடி வாசிப்பதன் மூலம் பல தெளிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இலவு காத்த கிளி போல இருக்கும் இம்மக்களுக்கு உடனடியாக காணி அனுமதிப்பத்திரம் கிடைக்க அரசியல் தலைவர்கள் தலையிட வேண்டும். இவ்விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டால் மனிதவுரிமை ஆணைக்குழு ,நீதி மன்றம் போன்றவத்திற்குச் சென்று நிவாரணங்களை பெற்றுக் கொள்ளலாம்.

1 comment:

  1. ஹும்....யாருக்கிட்ட? நாங்களும் படிச்சவெங்கதான்...

    ReplyDelete

Powered by Blogger.