பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, வாகனங்களின் தரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கை
(எம்.எம்.ஏ.ஸமட்)
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டுள்ள வாகனங்களின் தரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையினை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை முன்னெடுத்துள்ளது.
இந்நடவடிக்கை நாடுபூராகவும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸ்ஸநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதன்நிமித்தம், பாடசாலைச போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டுள்ள வாகன சாரதிகள் பொலிஸ் அறிக்கை, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனத்தின் சேவைக்கான தரத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை வைத்திருப்பது அவசியம்.
அத்துடன், அதிகார சபையின் அறிவிப்புக்களை அமுல்படுத்தத் தவறும் பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
Post a Comment