கல்முனைப் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் முக்கிய கலந்துரையாடல்
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கல்முனைப் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் முக்கிய கலந்துரையாடலொன்று இரவு 2014.02.13 இடம்பெற்றது.
கல்முனைப்பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் திகாமடுல்ல மாவட்டபாராளுமன்ற உருப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸின் ஏற்பாட்டில் கல்முனைக்குடி அல்-அஸ்ஹர்வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனைப்பிரதேச கல்விமான்கள் புத்திஜிவிகள் சமூக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் வர்த்தகப்பிரதிநிதிகள் பள்ளிவாயில்களின்தர்மகர்த்தாக்கள் சட்டத்தரணிகள் சமூக சேவை ஆர்வளர்கள் விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து
கொண்டனர்.
இதில் கல்முனைப்பிரதேசத்தில் எதிர்காலத்தில் கட்டாயம் செய்யப்படவேண்டியுள்ள அபிவிருத்திட்டங்கள் தொடர்பாக அந்தந்த துறை சார்ந்தவர்களிடமிருந்து அபிப்பிராயங்கள் பெறப்பட்டன.
Post a Comment