கொழும்பில் உலக இளைஞர் மகாநாடு
(எம்.எம்.ஏ.ஸமட்)
உலக இளைஞர் மகாநாடு எதிர்வரும் மே மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது.
'2015ஆம் ஆண்டின் அபிவிருத்திக்கு இளைஞர்களே முதன்மை' எனும் தொணிப்பொருளில் மே மாதம் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இவ்வுலக இளைஞர் மகாநாட்டில் உலக நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக இளைஞர் விவகார, திறன் அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஏதிர்வரும் தசாப்தங்களில் இளைஞர்களை சரியான பாதைகளில் வழிநடத்துவதன் மூலம் சிறந்த பெறுபேறுகளை அடையும் நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ள கொழும்பு இளைஞர் வரைபு எனும் ஆவணத்தை நாடுகளுக்கும் இளைஞர்களுக்குமிடையே முன்மொழியப்படுவதை இலக்காகக் கொண்டு இம்மகாநாடு நடைபெறவுள்ளது,
இளைஞர் விவகார, திறன் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து உலகளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ள 20 இளைஞர்களைக் கொண்ட சர்வதேச இளைஞர் விஷேட செயலணி இம்மகாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மகாநாட்டில் 1500 இளைஞர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றனா. இவர்களைத் தவிர இந்த மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக தெரிவு செய்ளப்பட்டுள்ள நாடுகளிலிருந்து இரு இளைஞர் பிரதிநிதிகளும் அத்துடன் சர்வதேச இளைஞர் விஷேட செயலணியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 350 இளைஞர்களும் பங்குகொள்ளவுள்ளதுடன் இலங்கையிலிருந்து 100 இளைஞர் பிரதி நிதிகள் மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இலங்கை இளைஞர் பிரதிநிதிகளாக கலந்துகொள்ள விரும்பும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மகாநாட்டுக்குரிய அலுவலக இணையத்தளமான றறற.றழசடனலழரவாஉழகெநசநnஉந2014.ழசப ஊடாக தங்களது விண்ணபத்தினைச் சமர்ப்பிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment