முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் இரு கண்காட்சிகள்
(கே.சி.எம்.அஸ்ஹர்)
அல்ஃ முனீறா பெண்கள் உயர்பாடசாலையில் இரு வௌ;வேறு கண்காட்சிகள் ஒரே நேரத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விஞ்ஞானத்துறை ஆசிரியர்களின் ஏற்பாட்டில் விஞ்ஞானப் பரிசோதனை கண்காட்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் நீர்ப்பரிசோதனையும் செய்துகாட்டிப்பட்டமை அதிகாரிகளால் பாராட்டப்பட்டது. சித்திரக்கண்காட்சி கவின் கலை ஆசிரியர்களின் முயற்சியால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருங்தது. இதில் ஓவியங்கள் ,அரிய புகைப்படங்கள் ,அரபு எழுத்தணிக்கலை ,கைப்பணிப்பொருட்கள் என்பன காட்சிக்கு வைக்கப்பாட்டிருந்தன. இதனைப் பார்வையிடுவதற்கு அட்டாளைச்சேனைக் கோட்டத்தில் இருந்து பல பாடசாலைமாணவர்கள் வருகை தந்து பார்வையிட்டதைக் காணமுடிந்தது.
நிகழ்வின் பிரதமஅதிதிகளாக அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் எ.எல்.எம்.; ஹாசிம் அவர்களும் ,கௌரவ அதிதிகளாக பிரதிக்கல்விப்பணிப்பாளர் அ.ச.அகமட் கியாஸ் அவர்களும் ,கணக்காளர் றிஸ்வி யஹ்சர் அவர்களும் ,முந்நாள் அதிபர் கே.எம்.சுபையிர் அவர்களும் கலந்து கொண்டனர்.கல்லுர்ரி அதிபர் எம்.ஐ .அப்துஸ்ஸலாம் அவர்களின் நெறிப்படுத்தலும் ,ஆசிரியர்களின் செயற்பாடும் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு சம்பவத்திரட்டுப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
Post a Comment