Header Ads



காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்


(யு.எல்.எம். றியாஸ்)

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக மாவடிப்பள்ளி,மாளிகைக்காடு,காரைதீவு கிராமங்களில் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன்
சுற்றுப்புற சூழல் பரிசோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒரு மாதகால விசேட வேலைத்திட்டத்திற்கு அமைவாக இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா பசீர் தலைமையில் இடம்பெற்று  வருகின்ற இவ் வேலைத்திட்டத்தில் காரைதீவு பிரதேச செயலகம்,சம்மாந்துறை பொலிஸ்,காரைதீவு சுகாதார வைத்திய அலுவலகம் என்பன கூட்டாக இணைந்து இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,கிராம உத்தியோகத்தர்கள் ,சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பொலிசார் ஆகியோர் இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.



No comments

Powered by Blogger.