கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராக ஏ.பி.எம்.அஸ்ஹர் தெரிவு
கல்முனைக்குடி 13ஆம் கிராம பிரிவுக்கான உத்தியோகத்தர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராக திட்டமிடல் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.அஸ்ஹர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கல்முனைக்குடி 13ஆம் கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கான கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கான புதிய நிருவாகிகளைத்தெரிவு செய்யும் கூட்டம்
அண்மையில் கல்முனைப்பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.முஷர்ரப் தலைமையில் நடைபெற்ற போதே இவர் தலைவராகத்தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே கல்முனைக்குடி 05ஆம் கிராம உத்தியோகத்தர்பிரிவுக்கான தலைவராகவும் செயல்பட்டுள்ளதுடன் தேசிய சமாதானப் பேரவையின் அம்பாரை மாவட்ட சமாதான செயற்பாட்டுக்குழுவின் செயலாளராகவும் கடமையாற்றிவருகின்றார். பிரபல ஊடகவியலாளரான இவர் சீடொ சமூக சேவை அமைப்பின் தவிசாளராகவும் செயற்பட்டுவருகின்றார்.
Post a Comment