றிசாத் பதியுதீனின் ஆளுமையை புரிந்துகொள்ள முடிகிறது - வடமாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன்
மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களில் அண்மையக் காலமாக ஏற்பட்டுவரும் கத்தோலிக்க –முஸ்லிம்,சிங்கள-முஸ்லிம்,தமிழ்-சிங்களவர்களுக்கிடையலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சியினை அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுப்பாரெனில் அது சாத்தியமாகும். ஏனெனில் உலகில் உள்ள முஸ்லிம் தலைவர்களில் 500 க்குள் ஒருவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதிலிருந்து அவரது ஆளுமையினை புரிந்து கொள்ள முடியும் என வடமாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா நகர மண்டபத்தில் இன்று மாலை இடம் பெற்ற உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரைாயற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் முதலைமச்சர் தமதுரையில் கூறியதாவது,
அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் சகோதரர் வடமாகாண சபையின் உறுப்பினராக இருக்கின்றார்.எம்மால் சபைக்கு கொண்டுவரப்படும் பிரேரணைகள் தொடர்பில் அவரது திருத்தங்களையும் முன் வைக்கின்றார்.அவை உள்வாங்கப்பட்டதன் பிற்கு எமக்கு ஆதரவை நல்குகின்றார். அதே போன்று அமைச்சர் றிசாத் பதியுதீனும் எமது வடமாகாண சபையின் அனைத்து திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவினை வழங்குவார் என நம்புகின்றேன்.
அண்மையில் ஜனாதிபதி அவர்களை நான் சந்தித்த போது,வடமாகாணத்தின் நியமனங்கள் தொடர்பில் கலந்து பேசினேன்.சிலர் தகைகை குறைந்தவர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நிரந்தர நியமனம் வழங்கப்படுகின்ற போது,அதன் தகைமைகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டு்ம் என்பதை ஜனாதிபதி எடுத்துரைத்தார். இருந்த போதும் அந்த தகைமைகளுடன் நீண்ட கால அனுபவமும் தகைமையாக கருதி இந்த நியமனம் இன்று வழங்கப்படுகின்றது.அதற்கு உதவி செய்த ஆளுநருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
சிலருக்கு இந்த நியமனம் வழங்கப்படவில்லை என அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் இப்போது என்னிடம் கூறினார். அவர்களது விபரங்களை பெற்று காலதாமதம் ஆனாலும் நியமனங்களை பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்றார்.
கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு பேசுகையில் கூறியதாவது,
வடமாகாண முதலமைச்சர் ஒரு சிறந்த அனுபவசாலி அவர் வடமாகாண முதலமைச்சராக தரிவு செய்யப்பட்டுள்ளது. எமது மாகாணத்திற்கு கிடைத்த வளமாகும்.சட்டத்துறையில் தேர்ச்சி பெற்றவர்,நீதி செலுத்தக் கூடிய ஒரு நீதயரசருமாவார்.
எமது மக்களின் நலன் குறித்து எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளுக்கும் எமது ஒத்துழைப்பு இருக்கின்றது.முதலமைச்சராக வந்துள்ள விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு போதும் நினைத்திருக்கமாட்டார் ஒரு அரசியல் வாதியாக வருவேன் என்று அவ்வாறு தான் நானும் இடம் பெயர்ந்து எனது குடும்பத்துடன் அகதி முகாமில் வாழ்ந்து கல்வி கற்று ஒரு பொறியிலாராக மாறினேன். அன்றைய காலத்தின் ஓட்டம் மக்களது அவலம் என்னையும் அரசியலுக்குள் இழுத்துவந்தது. கடந்த 13 வருட காலமாக இம்மக்களுக்கு எனது பணி சென்றடைகின்றது.
முல்லைத்தீவிலிருந்து இடம் பெயரந்து வவுனியா மெனிக் பார்முக்கு வந்த மக்களது தேவைகளை அன்று நான் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சராக இருந்த போது நிறைவேற்றிக் கொடுததோன்..இம்மக்களுக்கு உதவி செய்வதில் இரவு பகல் பாராது வவுனியா நகர சபை,செட்டிக்குளம் பிரதேச சபை,வவுனியா தமிழ் பிரதேச சபையின் ஊழியர்கள் செயற்பட்டதை நான் இன்றும் நன்றியுயுணர்வுடன் நினைவு கூர்கின்றேன் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன்,சிவசக்தி ஆனந்தன்,வடமாகாண ஆளுநரின் ஆணையாளர் ஷாஹிப் மொஹிதீன் ,மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
Post a Comment