Header Ads



அட்டாளைச்சேனையில் கர்ப்பணி தாய்மர்கள் பெரும் அவதி

(ஏ.எல்.ஜனூவர்)

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலும், அட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலையிலும் ஸ்கேனிங் வசதி இல்லாமையால் கர்ப்பணி தாய்மர்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் கர்ப்பணி தாய்மார்களுக்கு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலும், அட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலையிலும் கிளினிக் இடம்பெற்று வருகின்றது. அங்கு செல்லும் கர்ப்பணி தாய்மார்கள் ஸ்கேனிங் வசதி இல்லாமையால் தனியார் வைத்தியசாலையில் அல்லது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சென்று ஸ்கேனிங் பண்ண வேண்டியுள்ளது. கர்ப்பணி தாய்மார்கள் தான் குழந்தை பிரசவகிக்கும் வரையில் சுமார் 05 அல்லது 06 தடவை ஸ்கேனிங் செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறைக்கும் 1500 ரூபாய் வில் இருந்து 2000 ரூபாய் வரை செலவு செய்யப்படுகின்றது. வாழ்க்கை செலவு அதிகரித்து செல்லும் இந்ந காலகட்டத்தில் ஏழை தாய்மார்கள் பெரிதும் மன உணர்ச்சலுக்கு ஆளாகின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முஸ்லிம், தமிழ், சிங்கள மூவின மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறொறு சந்தர்ப்பத்தில் ஸ்கேனிங் வசதி இல்லாமல் இருப்பது பெரும் குறையாகவே காணப்படுகின்றது. ஏழை மக்களின் நன்மை கருதி குறித்த அரசாங்க அதிகாரிகள் இவ்வசதியை ஏற்படுத்தி தருமாறு அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கன்றனர். 

No comments

Powered by Blogger.