Header Ads



நாட்டிற்குள் விரோத மனப்பான்மை கொண்டவர்களை உருவாக்குவதை சர்வதேச சமூகம் கைவிட வேண்டும்

நாட்டிற்குள் விரோத மனப்பான்மை கொண்டவர்களை உருவாக்குவதை சர்வதேச சமூகம் கைவிட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டிற்காக உழைக்கும் பிரஜைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு முற்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதர் ஸ்ரீ லங்கா அமைப்பின் விருது மற்றும் பரிசு வழங்கும் நிகழ்வு சுகதாச உள்ளக அரங்கில் இன்று 11-02-2014 இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து சிறார்களிடம் கேட்டு அறிந்துகொள்வதற்கு சர்வதேச சமூகத்திற்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டார்.

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் சமூகத்தை பாதிப்படைய செய்வதற்கு எந்தவொரு சக்தியாலும் இயலாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.



3 comments:

  1. புலிகளை அழித்து முடித்தவுடன் இலங்கையில் தான் நினைத்தவாறு செய்யலாம் என்று அமெரிக்கா கனவு கண்டது.ஆனால் இலங்கையின் நிலைப்பாடு வேறுவிதத்தில் அமைந்துவிட்டது.எப்படியாவது இலங்கையை தன்னுடைய கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா எடுத்திருக்கும் ஆயுதம்தான் மனித உரிமை போர்க்குற்றம் என்பதெல்லாம்.இதைத் தடுக்க ஒரே வழி ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதோடு த.தே கூட்டமைப்பை வீட்டுக்கு அனுப்புவதுதான்

    ReplyDelete
  2. நாட்டின் ஜனாதிபதியை குடிமக்கள் அனைவரும் நேசித்தால் எந்த சக்தியும் எதையும் செய்து விட முடியாது,நேசிக்கப்படக்கூடியவராக ஜனாதிபதி மாறுவதே காலத்தின் தேவை,பாகுபாடுகளும்,முறையற்ற சிறந்த முகாமைத்துவமற்ற ஆட்சியையும் யார்தான் நேசிப்பர்? நாட்டின் கதையை அறியாமல் சுரேஷ் தில்லை ஜனதிபதிக்கு வக்காலத்து வாங்குகிறார்.லக்ஸ்மன் கதிர்காமர்,போன்றோர் இன்னும் நாட்டில் உள்ளது கவலையே.

    ReplyDelete
  3. சகோதரனுடைய கருத்துக்கு நன்றி.யுத்தத்தின் கொடூரத்தினால் நாம் இழந்தவைகள் கொஞ்சநஞ்சமல்ல.கொத்துக் கொத்தாக எம்மக்கள் அழிந்தபோது திரும்பிப் பார்க்காத சர்வதேசம் இப்போது எவற்றை நமக்குத் தரப்போகிறது.உறுதியான தலைமை இருந்தபோதுகூட எம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் ஒருவரையொருவர் அழித்துக் கொண்டுதான் இருந்தோம்.மீண்டும்மீண்டும் பிரிவினைக் கருத்துக்களைக் கூறி மக்களை உசுப்பெற்றுவதை விடுத்து அழிந்துகொண்டிருக்கும் எம் சமூகத்தை காக்க ஆக்கபூர்வமாக சிந்திப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.