Header Ads



அதிபரும், ஆசிரியர்களும் பெற்றோர்கள் போன்று செயற்படனும் - ஜனாதிபதி மகிந்த


மாணவர்களது பிரச்சினைகளை புரிந்துக் கொண்டு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் போன்று செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஹெட்டிபொல மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நாட்டின் எதிர்காலத்தை கையேற்கவுள்ள சந்ததியினரை சிறந்த வகையில் உருவாக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, பிள்ளைகளை பாதுகாக்க வேண்டியது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தவர்களது பொறுப்பு என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.