முஸ்லிம் குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளார்
மாத்தளை உக்குவலை பிரதேசத்தில் வசித்து வரும் 33 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கடந்த ஜனவரி 20 திகதி கல்ஹின்னை பிரதேசத்தில் வசிக்கும் தனது பெற்றோரை பார்க்க வந்து சென்ற பின் கானாமல் போயுள்ளதாக அவரது தந்தை அங்கும்புரை பொலீஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மொஹமட் ஹலீம்தீன் மொஹமட் அஸ்மின் என்ற 33 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாரு கானாமற் போயுள்ளவராவார்.
அவரது தந்தையான கல்ஹின்னை பாடசாலை வீதியில் வசிக்கும் எம்.ஹலீம்தீன் அவர்கள் எமக்கு தெரிவிக்கையில் தனது மகன் ஒரு வருடங்களுக்கு முன் மாத்தளை உக்குவலை பிரதேசத்தில் திருமனம் முடித்துள்ளதாகவும், அவர் வாராவாரம் பெற்றோரை பார்க்க வீட்டுக்கு வருவதாகவும் கடந்த ஜனவரி 20 ம் திகதி வீட்டுக்கு வந்து சென்ற பின் கானாமற் போயுள்ளதாகவும் தெரிவித்தார்.
தனக்கு தெரிந்த அளவில் இவருக்கு எதிரிகள் இருக்கவில்லை என்றும் சிறு தொழலை புறிந்து வந்த இவருக்கு தொழில் ரீதியாக எதிரிகள் இருந்தார்களா என்பது பற்றி தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இவரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் அறிய தருமாரும் அவர் கேட்டுக் கொள்கினறார்.
அவரது முகவரி,
267-1 பாடசாலை வீதி ,
கல்ஹின்னை
Post a Comment