பல கோடி பெறுமதியான பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குழு கைது
பல கோடி ரூபா பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய, 09 சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகத்துவாரம், புறக்கோட்டை, வத்தளை, கந்தானை மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையிடப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்த 03 வேன்களும், முச்சக்கர வண்டியொன்றும், 04 மோட்டார் சைக்கிள்களும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், சந்தேகநபர்களிடமிருந்து 15 இலட்சம் ரூபா பணமும் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள் களனி, குருநாகல், அங்கொடை மற்றும் நிட்டம்புவ ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
புறக்கோட்டையில் மூன்றரை கோடி வெளிநாட்டு பணம் மற்றும் தங்காபரணங்களை கொள்ளையிட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
புறக்கோட்டையில் நபர் ஒருவரிடம் துப்பாக்கியை காண்பித்து, மூன்றரை கோடி வெளிநாட்டு பணம் மற்றும் தங்காபரணங்கள் கொள்ளையிட்டப்பட்டிருந்தன.
கொள்ளையர்கள் இராணுவ உடை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment