Header Ads



சவூதி அரேபிய நிதியுதவியில் காத்தான்குடியில் மஸ்ஜிதுல் ஹிதாயா எனும் புதிய பள்ளிவாயல் திறப்பு


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தினால் சவூதி அரேபிய நிதாஉல் கைர் சர்வதேச இஸ்லாமிய அமைப்பின் சுமார் 45 இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் மட்டக்களப்பு – கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் இருந்து மிக அருகாமையிலுள்ள சரீப் புறக்கடர் வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதுல் ஹிதாயா எனும் புதிய பள்ளிவாயல் நேற்று 9 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அஷர் தொழுகையுடன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது இப் பள்ளிவாயளின் நினைவுக் கல்லை சவூதி அரேபிய பேராசிரியர் அஷ்ஷேய்க் ஹூஸைன் அல் குறைஷ் மற்றும் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் திரை நீக்கம் செய்து வைத்தனர்.

இங்கு பள்ளிவாயல்களின் முக்கியத்துவம் தொடர்பில் தென்கிழக்கு பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய கற்கை பீடத்தின்  பீடாதிபதி அஷ்ஷெய்க் எம் அலியார் றியாதியினால் விஷேட மார்க்க சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது.


No comments

Powered by Blogger.