Header Ads



நீர்கொழும்பு முஸ்லிம் வர்த்தக கொள்ளையுடன் தொடர்புடைய அரசியல்வாதிக்கு பல குற்றங்களுடன் தொடர்பு

நீர்கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் இடம்பெற்ற கொள்ளை தொடர்பில் கைதான ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை வேட்பாளர் ரொய்ஸ் பெர்னான்டோ மேலும் பல குற்றங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

1991 மற்றும் 1993 ஆண்டுகளில் பேலியகொடை, வென்னப்புவ பகுதிகளில்  இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் அவர் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

2012ஆம் ஆண்டு கட்டுநாயக்கவில் வெளிநாட்டு பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் அவர் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கைதுசெய்யப்பட்டுள்ள ரொய்ஸ் பெர்னான்டோ என்ற வேட்பாளரும், சந்தேகநபர்கள் இருவரும் 72 மணித்தியாலங்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.

அத்துடன், நிதி நிறுவனத்தில் கொள்ளையிடப்பட்ட பணத்தில் ஒரு இலட்சத்து 83 ஆயிரம் ரூபா சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.