Header Ads



டுபாயில் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)

இலங்கையின் 66வது சுதந்திர தின உத்தியோக பூர்வ கொண்டாட்டம் பெப்ரவரி நான்காம் திகதி செவ்வாய் கிழமை துபாயில் உள்ள இலங்கை பிரதி தூதுவராலயத்தில் நடைபெற்றது. 

தூபாயில் உள்ள இலங்கை பிரதித்தூதுவர் அப்துல் றஹீம் தேசிய கொடியை ஏற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். தேசிய கீதம் மங்கள விளக்கேற்றல், தேசிய வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி மற்றும் ஜனாதிபதி , பிரதம மந்திரி , வெளிவிவகார அமைச்சர் அவர்களின் ஆசிச்செய்திகள் ஆங்கிலம், சிங்களம், தமிழ் மொழிகளில் பிரதித்தூதுவர் அப்துல் றஹீம் மற்றும் ஏனைய உத்தியோகத்தினரால் வாசிக்கப்பட்டது. மேலும் பௌத்த இந்து இஸ்லாமிய கிறீஸ்தவ சமயப்பெரியார்கள் நாட்டுக்கும் துபாய் வாழ் இலங்கையர் அனைவருக்கும் மும் மொழிகளிலும் ஆசி வழங்கினர். 

அப்துல் றஹீம் தனது பிரதான உரையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள நிரந்தரமான அமைதியை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தீய சக்திகள் சீர்குழைக்க முனைவதாகவும் அதனை இலகுவாக வெற்றி கொள்வது இலங்கையர் அனைவரினதும் மத, மொழி வேறுபாடு அற்ற ஒற்றுமையின் மூலமே முடியும் என்று எடுத்துறைத்தார் மேலும் இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான தொடர்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் அன்மைய விஜயத்தின் மூலம் மேலும் நெருக்கம் அடைந்திருப்பதாகவும் விளக்கினார்.

துபாய் வாழ் இலங்கையர்கள் சுமார் 300பேர் அளவில் 04.02.2014 அன்று வேலை தினமாக் இருந்தும் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் பங்கு கொண்டதோடு பிரதித்தூதுவராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை மரபு உணவு வகைகளையும் சுவைத்து மகிழ்ந்ததோடு தமது பாரட்டுக்களையும் தெரிவித்தனர்.






No comments

Powered by Blogger.