யாழ்ப்பாண முஸ்லிம்களின் கவனத்திற்கு..!
(பா.சிகான்)
யாழ் மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்து இந்திய வீட்டத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ள யாழ் முஸ்லீம்களை தங்களது உறுதிப்படுத்தல் ஆவணங்களுடன் தயாராக இருக்குமாறு அப்பகுதி கிராம அபிவிருத்தி தலைவர் மு.மிஸ்னூன் அறிவித்துள்ளார்.
தற்போது இந்திய வீட்டுத்திட்டத்தின் 4 ஆவது கட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில் இதற்காக விண்ணப்பித்த யாழ் முஸ்லீம்களுக்கு தற்போது அதற்கான புள்ளியிடல் வழங்கப்படவுள்ளது.
எனவே இவ்வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் அதற்கான உறுதிப்படுத்தல் ஆவணத்தையும்,தங்களது உரிய இடத்தில் தயாராக இருக்குமாறும்,கேட்டுக்கொள்வதுடன் புள்ளிகளை வழங்க வரும் அரசாங்க அலுவலர்களின் செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாக உள்ள இந்நடவடிக்கை கிராம சேவகர் பிரிவுகளான ஜே-86.ஜே-87 உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பான அறிக்கைகளை தற்போது யாழ் மாவட்ட சகல பள்ளிவாசல் விளம்பர பலகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 8 மாதங்களிற்கு முன்னர் 300க்கு மேற்பட்ட முஸ்லீம் மக்கள் இந்திய வீட்டுத்திட்டத்தை பெற யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் ஊடாக விண்ணப்பித்த நிலையில் ,விண்ணப்பங்களை சம்மேளனம் பெரும் விழாவாக ஏற்பாடு செய்து யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் வைத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment