Header Ads



ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்ற முயற்சி - கோத்தபாய ராஜபக்ச

ஜெனிவாவில் அமெரிக்காவினால் கொண்டு வரப்படுகின்ற பிரேரணையானது இலங்கையில் இறுதிப்பகுதியில் ஏற்பட்டதாக கூறப்படும் சம்பங்களை பற்றியது என கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று 13-02-2014 இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,

அமெரிக்காவுக்கு சாதகமான அரசாங்கம் ஒன்றை இலங்கையில் ஸ்தாபிக்க முயற்சிகள் இடம்பெறுகின்றது.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவிருக்கின்ற பிரேரணை நாட்டுக்கு எதிரானது அல்லது அரசாங்கத்திற்கு எதிரானது என்று பலர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அவர்கள் கூறுவதில் அர்த்தம் எதுவும் இல்லை. எனில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட படையினர், அதிகாரிகள் நாட்டுக்கு உரியவர்கள் அன்றி, அரசாங்கத்திற்கு உரியவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தநிலையில், ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்றி, இந்துசமுத்திர நாடுகளில் தமது முகாம்களை அமைத்து அதன் மூலம் தமது சுயாதிபத்தியத்தை ஏற்படுத்த முனைகின்றவர்களை ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கையை மேற்கொள்ள முனைகின்றனர்.

இதனை இலங்கை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.