Header Ads



டுவிட்டர், யாகூ, ஈமெயில் என்று கண்ட பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டக்கூடாது..!

குழந்தைகளுக்கு தாங்கள் விரும்பியபடி பெயர் சூட்டுவதோ, செல்லப் பெயர்களில் அழைப்பதோ மெக்சிகோ நாட்டின் வடமேற்கில் உள்ள சோனோரா மாநில மக்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு 61 பெயர்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதில் தொழில்நுட்பத்தால் ஈர்க்கப்பட்ட டுவிட்டர், யாகூ போன்ற பெயர்களும், கற்பனை பாத்திரங்களான ஹாரி பாட்டர், ஜேம்ஸ்பாண்ட், ராம்போ மற்றும் மருத்துவ சிகிச்சை முறையில் வரும் சர்கம்சிசன் என்ற பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேபோல் வர்ஜின், ஹிட்லர், ஈமெயில், பர்கர் கிங், கிறிஸ்துமஸ் டே, ரோபோ காப் மற்றும் ரோலிங் ஸ்டோன் போன்ற செல்லப் பெயர்களில் குறிப்பிடப்படுவதும் அங்கு தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள முடிவாகும் என்று சோனோரா சிவில் பதிவு இயக்குனரான கிறிஸ்டினா ரமிரெஸ் தெரிவித்துள்ளார். பள்ளிக்கூடங்களில் இந்தப் பெயர்களைக் கொண்ட குழந்தைகள் கேலி செய்யப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதை தாங்கள் உறுதி செய்து கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறினார்.

மேலும் ஆட்சேபனைக்குரிய பெயர்களை அதிகாரிகள் கண்டறியும் பட்சத்தில் தடை செய்யப்படும் பெயர்ப்பட்டியல் மேலும் விரிவடையக்கூடும் என்றும் ரமிரெஸ் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.