Header Ads



சோமாலிய ஜனாதிபதி மாளிகை மீது தற்கொலை தாக்குதல் (வீடியோ)


ஆப்ரிக்க நாடான சோமாலியாவில், அதிபர் மாளிகை மீது, தற்கொலை படையினர், நேற்று தாக்குதல் நடத்தியதில், 11 பேர் பலியாகினர். சோமாலியாவில், பல ஆண்டுகளாக உள்ளூர் சண்டை நடந்து வந்தது. தற்போது, சர்வதேச நாடுகளின் ஆதரவுடன், ஹசன் ஷேக் முகமது அதிபராக உள்ளார்.

தலைநகர், மொகடிசுவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த, அல்ஷபாப் , 2011ல் வெளியேற்றப்பட்டு விட்டனர். சோமாலியாவில், சில கிராமங்கள் இவர்கள் கட்டுப்பாட்டில் 

உள்ளன. இந்நிலையில், அதிபர் மாளிகை மீது, நேற்று தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். வெடி குண்டு நிரப்பப்பட்ட இரண்டு வாகனங்களில் வந்த, அதிபர் மாளிகை வளாக, தடுப்பு சுவரின் மீது, வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனங்களை மோதினர்.

இதில், பாதுகாப்பு அதிகாரிகள், இருவர் உள்பட, 11 பேர் பலியாயினர். அதிபர் மாளிகை வளாகத்தில் பதுங்கியிருந்திகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில், அதிபர், பிரதமர் உள்ளிட்டோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

No comments

Powered by Blogger.