தௌஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் 'இன்றைய குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்களும் உளவளத்தீர்வுகளும்'
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் தஃவாப்பிரிவின் ஏற்பாட்டில் 'இன்றைய குடும்பங்கள் எதிர் நோக்கும் சவால்களும் உளவளத்தீர்வுகளும்' எனும் தலைப்பிலான சொற்பொழிவு நிகழ்ச்சி மட்- ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய மண்டபத்தில் கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் பொது தலைவர் மௌலவி ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி) தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் விஷேட சொற் பொழிவாளராக கிழக்கிழங்கையின் பிரபல உளவளதுணை ஆலோசகர் அஷ்ஷெய்க் எஸ்.எம். அப்துல் ஹமித் (ஷரயீ) அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பெண்களுக்கு மாத்திரம் நடை பெற்ற்நிகழ்வில் பாடசாலை மாணவிகள்,ஆசிரியைகள்,மற்றும் பெருத்தொகையான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
kattayam thewayana widayamodru.kilakkula sheethanam thala wirichu aaduzu.aza olikkurathukku allarum paadu padanum..
ReplyDeleteMasha allah. Shiranda muyatchi
ReplyDelete