முன்பள்ளிக் கல்வியை முறைமைப்படுத்துமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை
(எம்.எம்.ஏ ஸமட்)
சிறந்த பொறிமுறையினூடாக முன்பள்ளிக் கல்வியை முறைமைப்படுத்துமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் எம். அனஸ் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ள கோரிக்கை அடங்கிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வரையறுக்கப்பட்ட வயது, பயிற்றப்பட்ட ஆசிரியர், திட்டமிடப்பட்ட பாடத்திட்டம் என்பவற்றின் மூலம் முன்பள்ளிக் கல்வி முறைமைப்படுத்தப்படுவது காலத்தின் அவசியமாகவுள்ளது.
தாயின் கருப்பையினுள்ளே வளரும் முதிர் மூலவுருவின் மூளையின் விரைவான ஆரம்ப வளர்ச்சியுடன் அதன் கற்றல் செயற்பாடு தொடங்குகிறது என்பது யாவரும் அறிந்ததும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுமான கருத்தாகும். ஏறத்தாள நான்கு வாரங்களில் வளரும் முதிர் மூலவுருவானது ஒலியைக் கேட்கத் தொடங்குகிறது. அது தனது தாயினது சத்தையே முதலில் கேட்கும்.
பிறந்த பின்னர் முதல் வருடத்தில் மூளையின் கலங்கள் மிகவும் துரிதமாக வளர் கின்றன. அதைத் தொடர்ந்து, குழந்தையின் நடத்தைக் கோலங்களுக்கும் கற்றல் செயற்பாடுகளுக்குமான மூளையின் நரம்புக் கலங்கலாளாக்கப்பட்ட சுற்றுக்கள் உரு வாக்கப்படுகின்றன. இதுவே குழந்தையின் உணர்வு நிலையான, உணர்வு சார்ந்த கற்றலை விரைவுபடுத்துவதற்கான முக்கிய பொறுப்புள்ள காலகட்டம் ஆகும். இவ் வாறான நிலை குழந்தையின் வாழ்க்கையில் பிந்திய காலங்களில் மீண்டும் ஒரு போதும் நிகழப்போவதில்லை.
இத்தகைய பிள்ளைகளுக்கு கல்வி வழங்க வேண்டிய ஒரு சூழ் நிலையிலேயே தற்போது அதிக எண்ணிக்கையிலான முன்பள்ளி நிலையங்கள் எமது நாட்டில் இயங்குகின்றன. எளிய ஒழுங்குடைய பகல் நேர பிள்ளை பராமரிப்பு நிலையங்கள் முதல் சர்வதேசத்தரம் வாய்ந்த முன்பள்ளிகள் வரை இவற்றுள் அடங்கும்.
எவ்வாறாயினும் இந்நிறுவனங்கள் பெரும்பாலானவற்றில் வழங்கப்பட்டடிருக்கும் வச திகள், ஆசிரியர்களின் தரம் மற்றும் பயிற்சிகளின் வகை, பிள்ளைகளுக்கு வழங் கப்படும் கல்வி ஆகியவை திருப்தி தரக்கூடியனவாக இல்லை. இவை சில முன் பள்ளிகளில் உயர்ந்த தரத்தில் காணப்பட்டாலும், பெரும்பாலான முன்பள்ளிகளில் மிகவும் குறைந்த தரத்திலேயே உள்ளன. அதனால் எதிர்பார்க்கப்படும் (3-5) வய துக்குழு வினரிலிருந்து தற்போது இக்கல்வியில் பங்குபற்றுவோர் விகிதம் ஏறத்தாள 30 வீதமாக உள்ளது.
பிள்ளைகள் விருத்தியடையும் இக்காலப்பகுதியிலே சரியான வழிகாட்டுதல் வழங் குவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, பெரும்பாலான பிள்ளைகளுக்கு முன்பள்ளி அனுபவங்களைப் பெற்றுப் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படல் வேண்டும். இதன்பொருட்டு உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் வரும் மாகாண சபைகள், மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் முன்பள்ளி, பகல் நேரப் பராமரிப்பு நிலையங்கள், மற்றும் ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையங்களை தாபித்து நடாத்துமாறு ஊக்குவித்தல் வேண்டும்.
முன்பள்ளி ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்கான வசதிகளையும், கலைத்திட்ட அபிவிருத்தி மற்றும் மாதிரிக்கற்றல், கற்பித்தல் சாதனங்களையும் அமைச்சு, இந் நிலையங்களுக்கு வழங்குதல் வேண்டும். தமது வீடுகளிலேயே ஆரம்ப பிள்ளைப் பருவ விருத்தியைச் செயற்படுத்துவதற்குரிய பயிற்சி வேலைத் திட்டங்கள் மூலம் தாய்மாருக்கும், பராமரிப்பு நல்குவோருக்கும் பயிற்சிகள் வழங்கப்படல் வேண்டும்.
வளரும் குழந்தையினதும், முன்பள்ளிப் பருவத்திலுள்ள 3-5 வயதிற்கிடைப்பட்ட பிள்ளையினதும் மூளை வளர்ச்சியின்போது, கற்றல் செயற்பாட்டில் பின்பற்ற வேண் டிய நடைமுறை தொடர்பில், கடந்த காலத்தைவிடக் கூடிய கவனத்தைச் செலுத்த வேண்டியது கல்வி அமைச்சினது முக்கிய கூறாக்கப்படல் வேண்டும்.
அதன் ஊடாக, தகுந்த அதிகாரமுள்ளவர்களால் முன்பள்ளி ஆசிரியரின் தரம், பள்ளி வசதிகள் போன்ற விடயங்கள் மேற்பார்வைக்குட்படுத்தும் வகையில், சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் முன்பள்ளிக் கல்வியை முறைமைப்படுத்தி ஒழுங்கமைத்தல் வேண்டும் என்பது சங்கத்தின் கோரிக்கையாகுமென இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் வேண்டியுள்ளது.
Post a Comment