வீதிகளின் வேலைகளை துரிதமாக ஆரம்பியுங்கள்..!
(யு.எம்.இஸ்ஹாக்)
திதுலன கல்முனை திட்டத்தினூடாக ஏற்கனவே உள்ளீர்க்கப்பட்டும் காலதாமதமாக இருந்த கல்முனை அலியார் வீதி, செய்லான் வீதிகளின் வேலைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்து தாமதமாகிக் கிடக்கும் இவ்வீதிகளின் வேலைகளை துரிதமாக ஆரம்பிக்க நடவக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உருப்பினரும், கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் விடுத்த கோரிக்கைக்கமைய அதற்கான அனுமதிக் கடிதத்தினை சம்பந்தப்பட்ட அம்பாறை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
இவ்வீதி அபிவிருத்தியில் கல்முனை அலியார் வீதிக்கு சுமார் 5.5 கோடி ரூபாவும், கல்முனை செய்லான் வீதிக்கு சுமார் 6 கோடி ரூபாவும் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வீதிகள் இரண்டும் வடிகானுடன்கூடிய காபட் வீதிகளாக விரைவில் செய்யப்படவுள்ளன.
Post a Comment