முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதில் மோசடிகள்
(Nf) முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதில் மோசடிகள் இடம்பெற்றதாக 150 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகள் 2 வாரங்களுக்குள் பரிசீலனை செய்யப்பட்டு, மக்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.
இதற்காக விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் மோசடிகள் இடம்பெற்றிருந்தால், அதுதொடர்பில் கல்வி அமைச்சுக்கு அல்லது மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அறியத்தருமாறு அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment