ஆத்தியடிகட்டு வாய்க்கால் பாராளுமன்ற பைசால் காசிமின் முயற்சியால் அபிவிருத்தி
(யு.எல்.எம். றியாஸ்)
நிந்தவூர் செங்கப்படை கண்டம் ஆத்தியடிகட்டு வாய்க்கால் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் முயற்சியின் பயனாக அபிவிருத்தி செய்யப்பட
உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் நீர்பாசன அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவிடம் விடுத்த வேண்டுதலிர்கினங்க இதன் புனர் நிர்மான அபிவிருத்தி நடவடிக்கைகள் இம்மாதம் 15ம் திகதி (15.02.2014) ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக கல்முனை நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் குழுவினர் அண்மையில் களப்பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.இவ் அபிவிருத்தி நடவடிக்கையின்மூலம் சுமார் ஏழு ஆயிரம் விவசாய காணிகளுக்கு முறையான நீர்பாசனம் கிடைக்கவுள்ளது.
Post a Comment