கோச்சடையானுக்கு முன் வெளிவரவுள்ள, கெலம் மக்ரேயின் நிர்வாணப் படம்
(றிசானா பசீர்)
இலங்கை அரசு கருணா என்ற இரையைக்குத்தி பிரபாகரன் என்ற சின்ன மீனைப் பிடித்தது. இலங்கையின் இறுதி யுத்தம் நடந்தது ஒரு வெட்டவெளி யிலாகும். இக்காட்சி முழுவதும் செட்டலைட் முலம் படம் பிடிக்கப்பட்டு விட்டது. போதாக்குறைக்கு பணத்தை தண்ணீர் போன்று இறைத்து இலங்கை இராணுவத்திடம் இருந்தும் போரின் உச்சக்கட்ட படங்களைபெற்றுக் கொண்டது அமெரிக்கா.
எப்ப வரனும் எப்படி வரனும் எங்கு வரனும் என்று யாரும் அமெரிக்காவுக்கு கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. அமெரிக்கா கற்றுக்குட்டியும் அல்ல. சரியான நேரத்தில் சரியான இடத்துக்கு வருவார்கள். சரியாக 22ம் திகதி மார்ச் மாதம் இத்திரைப்படம் சென்னையில் திரையிடப்படவுள்ளது. பெரும் புரளியை ஏற்படுத்தவுள்ளது. கோச்சடையான் பற்றிய பேச்சே இராது. இசைப்பிரியாதான் முன்நிற்பாள்.
இந்த ”வோர் கிறைம் நிர்வாணப்படத்தின்” தயாரிப்பாளர் பிரித்தானியா. அதன் டைரக்டர் அமெரிக்கா.
மஹிந்த என்ற பெரிய மீனை இலகுவாகப் பிடிக்க தமிழ் நாட்டின் ஆதரவு இன்றியமையாதது. எனவே இந்தியாவை கொதிப்படையச் செய்ய வேண்டும்.
ஆகையால் இதில் காண்பிக்கப்படப் போவது யுத்தக்காட்சியல்ல. இது தமிழ்நாட்டில் ஒரு பேரலையை எழுப்பும். ஏன் இந்தியாவையே ஒரு குலுக்குக் குலுக்கும். இதோடு நின்று விடாது ஜெனிவாவில் உள்ள திரையரங்கிலும் இறுதியாகத் திரையிப்படும். இலங்கை அரசின் முகத்திரை கிழியும். ஜெனிவாவில் இலங்கை ஆதரவளிக்க நினைக்கும் நாடுகளும் ஆதரவை நல்காது. அமெரிக்கா ஒரு வல்லரசு என்பதை அந்த இடத்தில் நிறுவிச்செல்லும். இது சிலவேளை கோச்சடையான் படத்தின் வசுலையும் சில வேளை பாதிக்கலாம்.
Post a Comment