முஅய்யித் பாடநெறி சான்றிதழ் வழங்கலும், புதிய பாடநெறி ஆரம்பமும்
ஸ்ரீலங்கா இஸ்லாமிக் நிலையம் கட்டார் (SLIC), மர்கஸ் அப்துல்லாஹ் பின் ஸைத் அல் மஹ்முத் கலாச்சார நிலையத்துடன் (FANAR) ) இணைந்து நடாத்திய முஅய்யித் பாடநெறியில் பங்குபற்றியோருக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த 07.02.2014 வெள்ளிக்கிழமை ஆயிஷா அல் புஐனைன் ஜூம்ஆ பள்ளிவாயிலில் சிறப்பாக இடம்பெற்றது.
ளுடுஐஊயின் தலைவர் அஷ்ஷெஹ் ஸியாவுதீன் மதனி, செயலாளர் பொறியியலாளர் அமானுல்லாஹ், நிருவாகசபை உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் பாடநெறியை பூர்த்திசெய்த சகோதரர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இஸ்லாத்தின் அடிப்படைகளை தெளிவாகவும், சுருக்கமாகவும் விளக்குகின்ற இப்பாடநெறியினை கட்டாரில் வசிக்கின்ற ஆயிரக்கணக்கான சகோதரர்கள் பங்குபற்றி பயன்பெற்றுள்ளனர்.
இப்பாடநெறியில் பங்குபற்றி பயன்பெற்ற சில சகோதரர்கள் தமது கருத்துகளைக் குறிப்பிட்டனர்.
மதீனா பல்கலைக்கழக பட்டதாரியான ஒரு சகோதரர் குறிப்பிடுகையில்: 'எனது வாழ்வில் பல வருடங்களாக கலாசாலைகளிலும், பல்கலைகழகங்களிலும் நான் பெற்றுக்கொண்ட இஸ்லாமிய அறிவின் அடிப்படைகளை இப்பாடநெறியின் மூலம் ஒரு தொகுப்பாக பெறக்கிடைத்தது.'
இன்னும் ஒரு சகோதரர் 'எனது வாழ்விற்கு ஒரு இலக்கையும், தெளிவையும் தந்திருக்கிறது' என குறிப்பிட்டார்.
'இப்பாடநெறியானது அல்லாஹ்வின்; தூதையும், நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல்களையும் தெளிவாக்கியதுடன், இஸ்லாத்தின் ஆள, அகலங்களையும், அதன் பன்மைத்துவத்தையும் அழகாக விளக்கியது'என்றார் மற்றொரு சகோதரர்.
முற்றிலும் இலவசமாக நடாத்தப்படும் இப்பாடநெறியின் புதிய வகுப்பு இன்ஸாஅல்லாஹ் கட்டாரில் எதிர்வரும் 14.02.2014 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையுடன் 6 மணிக்கு FANAR கலாச்சார நிலையத்தில் 4வது மாடியில், 3வது வகுப்பறையில் ஆரம்பிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் பங்குபற்ற விரும்புகின்ற சகோதரர்கள் தொடர்பு கொள்ள - 66270573, 70518151 slicqatar@gmail.com.
Post a Comment