இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படத்தை யூ ட்யூபில் இருந்து நீக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு..!
(Thoo) சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையையும், எதிர்ப்பையும் கிளப்பிய இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படம்’இன்னஸன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ என்ற திரைப்படத்தை யூ ட்யூபில் இருந்து நீக்கம் செய்யவேண்டும் என்று அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் கூகிள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.இத்திரைப்படத்தில் நடித்த ஸிண்டி லீ கார்ஷியாவின் புகாரை ஏற்று அமெரிக்க சர்க்யூட் அப்பீல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுக்குறித்து கார்ஷியா கூறுகையில்,’இஸ்லாத்தை அவமதிக்கும் திரைப்படம் என்று நான் அறிந்திருக்கவில்லை.எனக்கு அளிக்கப்பட்ட ஸ்க்ரிப்டில் முஸ்லிம்களையோ, இறைத்தூதரையோ குறித்த விமர்சனம் இடம் பெறவில்லை’ என்று தெரிவித்தார்.
2012-ஆம் ஆண்டு இத்திரைப்படம் யூ ட்யூபில் வெளியானது.இஸ்லாத்தின் இறுதித்தூதரை மோசமாக இத்திரைப்படம் அவமதித்திருந்தது.இதனால் ஏற்பட்ட எதிர்ப்பில் மேற்காசியாவில் ஏற்பட்ட மோதலில் பலர்
கொல்லப்பட்டனர்.லிபியாவின் பெங்காசியில் அமெரிக்க தூதரக பிரதிநிதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
திரைப்படத்தை யூ ட்யூபில் இருந்து நீக்கம் செய்ய கோரும் அதிகாரம் திரைப்பட தயாரிப்பாளருக்கே உண்டு என்ற கூகிளின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
Post a Comment