Header Ads



இலங்கையில் நான்கு பேரில் ஒருவர் மன நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்

இலங்கையில் நான்கு பேரில் ஒருவர் மன நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சட்ட உளவியல் மருத்துவர் ரீ.எஸ்.எஸ்.மெண்டிஸ் தெரிவித்துள்ளார். 

நாட்டில் 25 வீதமானவர்கள் ஏதேனும் ஓர் உளவியல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் உளவியல் சிகிச்சை வழங்கக் கூடிய தகைமையுடைய 60 மருத்துவர்களே கடமையாற்றுகின்றனர். 

இதனால் நாளுக்கு நாள் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளை தடுக்க முடியவில்லை. குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த நாடு முழுவதிலும் 25 சட்ட வைத்திய அதிகாரிகளே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்னர். 

இது எந்த வகையிலும் போதுமானதல்ல என தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வட மாகாணத்திலேயே மனஉழைச்சலுக்கு உள்ளானவர்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. என்றும் காணாத நெருக்கடியை மக்கள் இவ்வரசாங்கத்தில் அனுபவித்து வருகின்றார்கள். இருக்காதா பின்ன... இது தொடருமானால் இந்த சதவீதம் அதிகரிக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.