Header Ads



முஸ்லிம்கள் அஞ்சத் தேவையில்லை, அவர்கள் ஒருபோதும் நாட்டுக்கு துரோகமிழைக்கவில்லை - கோதா


பாகிஸ்தான் உட்பட முஸ்லிம் நாடுகளினதும் சீனாவினதும் உதவியும், ஒத்துழைப்பும் கிட்டியதன் காரணமாகவே யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்ததாகவும்,  இலங்கை முஸ்லிம்களும் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை குறைத்து மதிப்பிட முடியாது எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச சுட்டிக் காட்டியுள்ளார்.

முஸ்லிம் வர்த்தக சமூகத்தின் குழுவொன்று வர்த்தக பிரமுகர் ரிபாய் ஹாஜியாரின் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பாதுகாப்புச் செயலாளர்  இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இச்சந்திப்பில் அமைச்சர் பௌசியுடன் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சர்வதேச வை.எம்.எம்.ஏ.தலைவர் அஷ்ரப் ஹுசைன், கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே. எம். முஸம்மில், முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் உட்பட வர்த்தகப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அண்மைக் காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகள் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டபோது பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர், சிறுகுழுக்கள் ஆட்டம் போடுகின்றன அதனை நாம் அடக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க மாட்டோம். எதிர்ப்புச்சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். முஸ்லிம் சமூகம் அஞ்சத் தேவையில்லை.

முஸ்லிம் சமூகம் ஒருபோதும் நாட்டுக்கு துரோகமிழைக்கவில்லை. அவர்கள் அரசுக்கு விசுவாசமாகவே இருக்கின்றனர். இதனை நாம் ஒருபோதும் மறவோம். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது எமது படைக்கு பாகிஸ்தானும், வேறு சில முஸ்லிம் நாடுகளும் தாராளமாக உதவியுள்ளன. அதேபோன்று சீனாவும் உதவியது. 

இறுதி நேரத்தில் உள்ளகப் பிரச்சினை காரணமாக சீனா பின்வாங்கிய நிலையில், பாகிஸ்தானும் முஸ்லிம் நாடுகளும் இறுதிவரை உதவியளித்தன. அந்த உதவி கிட்டாதிருந்தால் இறுதி யுத்த வெற்றி கிட்டி இருக்குமா என்பது சந்தேகத்திற்கிடமானதாகும்.

இந்த நன்றியை அரசு ஒருபோதும் மறவாது. முஸ்லிம்களை அரசு ஒருபோதும் கைவிடப்போவதில்லை. முஸ்லிம் சமூகத்திற்கு நாம் அநீதி இழைக்கப் போவதில்லை. உங்கள் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

8 comments:

  1. என்ன வேடிக்கை.... ஒரு சில நாட்களாக இவர்களின் அறிக்கைகள் மிகவும் வியப்பாவே உள்ளது. முஸ்லீம்களை 'பயங்கரவாதிகள்' என்று சர்வதேச அறிக்கை விட்டவர்தான் இவர். இன்று முஸ்லீம்களுக்கு எதிரான அந்த 'சிறு குழுக்களுக்கே' தலைவராக நடித்து இப்படி ஒரு கருத்தை வெளியிடுவதன் மூலம் யாரை ஏமாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. இவ்வாரான ஏமாற்றுக் கருத்துக்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பௌசி, முஸம்மில், முஸ்தபா போன்றோருக்கு வேண்டுமானால் 'இனிப்பாக' இருக்கலாம்.

    கடைசியாக கொழும்பு வைத்தியசாலையில் தன் கையால் திறந்து வைத்த தொழுகை அறையை அடுத்த நாளே 'வெற்றிகரமாக' மூடியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வக்கில்லாத அந்த பௌசி போன்றோர் இருக்கும் வரை இவ்வாரான முட்டாள்தனமான 'அறிக்கை'களை நாங்களும் படிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளானவர்களாவே இருக்கிறோம்.

    ReplyDelete
  2. Please do not say by words we need action that you are saying is it true please prue it that is what our community wants

    ReplyDelete
  3. Sir, I remind you that this is the not last and least election.

    ReplyDelete
  4. சொல்ல‌வே இல்ல...

    ஒருகாலம் BBSஐ அரவனைத்த கோத்தாவா இப்படி பேசுகிரார் ?
    பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதென்பது இதைத்தானா?

    எப்புடி இருந்த என்ன (ஜெனீவாகாரனுங்க) இப்புடி ஆக்கிட்டானுங்கலே!

    ReplyDelete
  5. ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகின்றது...

    இதைதான் தமிழ் நாட்டில் சொல்வார்கள்..,

    "யோக்கியன் வாரான்.. வெள்ளிச்செம்ப எடுத்து உள்ளவை" என்று...

    ReplyDelete
  6. நாங்கள் அஞ்சுவதும் கெஞ்சுவதும் அல்லாஹ் ஒருவனைத்தான்

    ReplyDelete
  7. ரிபாய் ஹாஜியாரின் இல்லத்தில் கோதாவுக்கு வட்டிலப்பம் கொடுத்தாங்களோ?

    ReplyDelete
  8. இவருக்கு நல்ல வசம்பு கொடுக்க வேண்டும்.நேரம் பார்த்து வசணங்களை கருத்துக்களை மாற்றுகிறார்.
    முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்றவர்,இப்போ எல்லாவற்றையும் மொத்த ஸ்க்ரிப்டையும் ஜெனீவாவுக்காக மாற்றிவிற்றார்.ஜெனீவா முடிந்தால்,இவர்களைப்பிடிக்க 10பேர் தேவை.

    ReplyDelete

Powered by Blogger.