ஊடகவியலாளரை கொலைசெய்த சந்தேக நபர் பிடிபட்டான்
ஏ.எவ்.பி செய்தி நிறுவன முன்னாள் ஊடகவியலாளர் மெல் குணசேகர அவா்களின் கொலையுடன் தொடர்புடையவா் என்ற சந்தேகத்தில் தொம்பே பிரதேசத்தில் வைத்து ஒருவா் சற்று முன்னர் கைதாகியுள்ளார் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது. மிரிகான காவல்துறையின் விசேட புலனாய்வுப் பிரவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் கைத்தொலைபேசி இருந்துள்ளது.
கைது செய்யப்பட்டவா் மேசன் தொழில் செய்பவா் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன் கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் வீட்டில் வேலை செய்தவா் என்றும் தெரியவந்துள்ளது. அதேவேளை கொலைக்குப் பயன்பட்ட கத்தி கைப்பிடி வேறாகவும் பட்டம் வேறாகவும்காவல்துறையால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடள், துளையிடும் கருவியொன்றும் கொலைசெய்யப்பயன் படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனையும் காவல்துறை கண்டு பிடித்துள்ளதாகவும் தெரிகின்றது.
Post a Comment