Header Ads



கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை ஏற்பாட்டில் புற்றுநோய் தினம்


(ஹாசிப் யாஸீன் + ஏ.எல்.ஜுனைதீன் )


உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு 'புற்று நோய் பற்றிய பிழையான எண்ணக்கருத்துக்களை மக்கள் மத்தியில் இல்லாது களைவோம்' எனும் தொனிப்பொருளில் கல்முனை பிராந்தியத்திலுள்ள மக்களை விழிப்பூட்டும் பேரணியும் துண்டுப் பிரசுர விநியோகமும் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சுகாதார கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் இன்று (20) இடம்பெற்றது.

அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் பீ.கே.ரவிந்திரன், கண் வைத்திய நிபுணர் டாக்டர் எம்.எம்.ஏ.றிசாட், பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.பாறூக், சட்ட வைத்தியர் டாக்டர் வை.எல்.எம்.யூசுப், விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் ஏ.எம்.ஹபீல், தாதிய உத்தியோகத்தர் எம்.சீ.எம்.சீ. கமறுற் றிழா மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது புற்று நோய் ஏற்படக் காரணம், அதன் அபாய அறிகுறிகள், அதனை எவ்வாறு கண்டுபிடிப்பது, புற்று நோயை தவிர்க்க உட்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் அறிவூட்டப்பட்டதுடன் புகைப்படங்களும் உணவுப் பொருட்களும் காண்பிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.