செவ்வாய் கிரகத்துக்கு முஸ்லிம்கள் செல்ல தடை
(Mm) செவ்வாய் கிரகத்துக்கு முஸ்லிம்கள் செல்ல ஐக்கிய அரபு நாடுகள் தடை விதித்துள்ளது. வருகிற 2024–ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பி அங்கேயே நிரந்தரமாக குடியமர்த்துவதாக டென் மார்க்கை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அதற்கான நேர்காணலும் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் அதில் ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் மத நம்பிக்கை மற்றும் கோட்பாடுகளுடைய முஸ்லிம்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதற்கு அந்நாட்டு அரசு நன்றி தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் ‘தி மார்ஸ் ஒன்’ இணைய தளத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அதில், செவ்வாய் கிரகத்தில் குடியேற தாங்கள் பெற்ற 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் சவுதி அரேபியா மற்றும் பிற அரபு நாடுகளை சேர்ந்த 500 பேர் விண்ணப்பித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்டம் நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பயணம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியது. அதை இஸ்லாம் ஒரு போதும் நியாயப்படுத்தாது. செவ்வாய் கிரகத்துக்கு செல்பவர்கள் அங்கு நிரந்தரமாக தங்க முடியாது. அதன் மூலம் மரணங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் வீரர்கள் வெற்றி கரமாக விண்வெளிக்கு சென்று சாதனை நிகழ்த்தி வருகின்றனர். சவுதி அரேபியா அரச குடும்பத்தை சேர்ந்தவரும், சவுதி அரேபிய விமானியுமான கல்தான் சல்மான் அல் சவுத் கடந்த 1985–ம் ஆண்டு டிஸ்கவரி ஓடம் மூலம் விண்வெளிக்கு சென்று திரும்பினார்.
இவரே விண்வெளிக்கு சென்ற முதல் முஸ்லிம் வீரர் என்ற பெருமையை பெற்றவர்.
Post a Comment