Header Ads



காத்தான்குடியில் ஈரோ தோட்டம் திறப்பு


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில்  இன்றைய நவீன முறையில் காலத்திற்கேற்ப புதிய தொழில் நுட்பத்தில் எமது அன்றாட தேவைகளை தாமே பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வீட்டுத் தேவைக்கான மரக்கறி வகைகளையும் ,பப்பாளி,அன்னாசி,இஞ்சி,வாழை போன்ற பயிர்களையும் உற்பத்தி செய்யும் ஈரோ காடின்ஸ் நிறுவனத்தின் ஈரோ தோட்டம் 

(EURO GARDENS ஈரோ காடின்ஸ்) திறப்பு விழா இலக்கம்.327 ,கடற்கரை வீதி,புதிய காத்தான்குடி எனும் முகவரியில் இன்று 28-02-2014 வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது இத் தோட்டத்தின் நாடாவை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இங்கு கத்தரிக்காய்,தக்காளி ,கறி கொச்சிக்காய் போன்ற மரக்கரி வகைகள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அதிதிகளினால் அறுவடை செய்யப்பட்டன.

அத்தோடு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் ஈரோ காடின்ஸ் நிறுவனத்திற்கு நிறுவனத்தின் பணிப்பாளர். ஏ.பி.எம்.சப்ரியிடம் ஒரு லட்சம் ரூபாய் அன்பளிப்பு செய்யப்பட்டது.


No comments

Powered by Blogger.