மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவது மட்டுப்படுத்தப்படும்..!
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்பும் நடவடிக்கைக்கு தடை விதிக்க இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள் மாத்திரமன்றி வேறு வெளிநாடுகளுக்கு இலங்கை பணிப்பெண்களை அனுப்புதல் மட்டுப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விடயத்தை குவைத்திற்கு இலங்கை தூதுவர் சி.ஏ.எச்.எம்.விஜேரட்ன தெரிவித்தார். குவைத்தில் மொத்தமாக 130,000 இலங்கையர்கள் பணியாளர்களாக உள்ளனர்.
அவர்களில் 80 ஆயிரம் பேர் வீட்டுப்பணியாளர்களாக செயற்படுகின்றனர்.
பணிப்பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதன் மூலம் சமூக குடும்ப பிரச்சினைகள் பெருமளவில் அதிகரித்துவதாக குவைத்திற்கான இலங்கை தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெண்களை தடுக்கும் முன் அவர்கள் நாட்டை விட்டு வெளியேர என்ன காரணம்,அவர்களை நாட்டை விட்டும் விரட்டியது என்ன என்பதை அறிவுபூர்வமாக விளங்கி அதற்கு தகுந்த பிரதியீட்டை காணமுற்பட வேண்டும்,அதுவே சிறந்த அறிவு.நாளுக்கு நாள் ஏழைகள சூரையாடும் விளைவாசிகளே அவர்களை முடிவில்லா வெளினாட்டு வாழ்க்கைக்கு தள்ளியது,இதுவே மேலும் பலரையும் இன்னுமும் வெளியேற்றுகிறது.பெண்கள் என்ன,ஆண்களாவது சொந்த நாட்டில் சொந்த தொழில் செய்து வாழலாமா என்றால் அதுவும் முடியாத காரியம்.எனவே,ஒரு வியாதிக்கு மருத்துவம் பார்ர்க்கும் முன்,அது எதனால் வந்தது என்பதை அறிந்து அதிலிருந்தும் விடுபட வைக்க நோயாளிக்கு தகுந்த ஆலோசனையும் வழங்குவதே சிறந்த மருத்துவம்.ஆட்சி மாறினாலும் இன்னும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு நாட்டை அதன் பாதால குழியிலிருந்தும் காப்பாற்ற முடியாது என்று எதிர்க்கட்சிகள் சொல்லுகின்றன,அந்தளவுக்கு நாட்டின் ஓட்டை மிக ஆழமாகவுள்ளது.ஒரு இலங்கை பிரஜையின் சராசரி நாட்டுக்கு செலுத்த வேண்டிய கடனாளின் தொகையாக 300,000 ரூபா காணப்படுகிறது.
ReplyDelete