Header Ads



நடிகைகள் எல்லாம் எமது கட்சியில் சேர்த்துக்கொள்ளும்படி தொல்லை கொடுக்கின்றனர் - றிசாத் பதியுத்தீன்


(அஸ்ரப் ஏ சமத்)

கல்முனை எம். எஸ் காரியப்பர் பேரனும் முன்னாள் நிதியமைச்சராக இருந்த நிந்தவுரைச் சேர்ந்த மர்ஹூம் முஸ்தபா எம்.பியின் இழைய மகன் பட்டயக் கணக்களார் ரேயால் கல்லூரி பழைய மாணவனுமான  நவாஸ் முஸ்தபாவின்  தெஹிவளை இல்லத்தில் அவரின் குடும்பத்தார் ஒன்று கூடினார்கள்.

நாவாசை தேர்ந்தெடுத்தமைக்கு அமைசச்ர் றிசாத்பதியுத்தினுக்கு அவரது குடும்பத்தார் நன்றி கூறினார்கள்.  

நவாஸ் இம்முறை கொழும்பு மாவட்டத்தில் மேல் மாகணசபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசில் போட்டியிட உள்ளதாகவும் அவரது குடும்பங்கள் ஒவ்வொருவரும் இணைந்து கிழக்கில் வடக்கில் இருந்து கொழும்பில் வாழ்கின்ற 1 இலட்சத்திற்கும் இருபத்தையாயிரம் மேற்ப்டட முஸ்லீம் வாக்காளர்கள் உள்ளனர். இவரது வெற்றிக்காக   நவாசின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை உற்சாகப்படுத்தி அவரது வெற்றிக்காக உழைக்குமாறு அமைச்சர் றிசாத் வேண்டிக்கொண்டார். 

எமது கட்சி முஸ்லீம் என்ற வசனத்தை நீங்கி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியாக நாளை தேர்தலில் வேற்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

இங்கு உரையாற்றிய அமைச்சர் றிசாத் பதியுத்தீன்,

ஆரம்பத்தில் வேற்பாளர்கள் தேடித்திருந்தோம். தற்போது பெரிய கட்சிகளில் இருந்து நீக்கிய பெரும்பாண்மை சகோதரர்கள் பெருமளவில் எங்களை உங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்ளும்படி நாளாந்தம் குவிந்து கொண்டுவருகின்றார்கள். . வேட்பாளர்கள் பட்டியலில் வேட்பாளர்கள் ஏட்டிக்கு போட்டியாக சேர்த்துக் கொள்ளும்படி சில வி.ஜ.பி கள் எங்களுக்கு சிபார்சுகளையும் செய்கின்றனர்.

முன்னாள் உறுப்பினர் அஜ்மல் மவ்சுத், அவரின் சகோதரர் என பலர் மேல்மாகணசபை உறுப்பினர் பயிஸ் ஆகியோறும் எமது  கட்சியில் வேற்பு மனு கேட்டுள்ளனர். ஜக்கிய மக்கள் சுதந்திர கட்சியில் டிக்கட் கொடுக்காத சில நடிகைகள் எல்லாம் எமது கட்சியில் சேர்த்துக்கொள்ளும்படி தொல்லை கொடுக்கின்றனர். நாம் ஒருபோதும் அவர்களுக்கு இடமளிக்கப்போவதில்லை.
எங்களது கட்சியில் முதன்மை வேற்பாளர் முன்னாள் மாகணசபை உறுப்பினர் பாயிஸ் உள்ளார். அடுத்தபடியாக நவாசை நாம் நம்புகின்றோம். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை இம் முறை எமது கட்சி பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது என றிசாத் தெரவித்தார்.

கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட்  உரையாற்றுகையில்,

தற்பொழுது முஸ்லீம் காங்கிரஸின் மேல் மாகணத்தில்  ஆதரவு சரிந்துவருகின்றது.  மேல் மாகணாத்தில் எஙகள் பக்கம் நாளுக்கு நாள் ஆதரவு பெருகியுள்ளது. எமது கட்சி முதன் முதலாக வட கிழக்கு வெளியே இதுவே முதற்தடவையாக மேல் மாகாணத்தில் தேர்தலில் குதிக்கின்றது. நாங்கள் போகும் இடமெல்லாம் நிறைய ஆதரவு உள்ளது. அத்துடன் இக் ;கட்சி முஸ்லீம் என்ற இன வசனத்தை நீக்கியதால் இரண்டு  கட்சியின் வெறுப்புக் கொண்டவர்கள் எங்களது கட்சி ஆதரிக்க உள்ளதாகவும் ஹமீட் தெரிவித்தார். வட கிழக்கில் இருந்து கொழும்பில் வாழும் முஸ்லீம்களை சரியாக அனுகி அவர்கள் தமது வாக்குகளை கொழும்பில் அழித்தால் 4 மேற்பட்ட உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக தெஹிவளை, ராஜகிரிய, போன்ற பகுதிகளில் வாக்குகளை பதிந்த முஸ்லீம்கள் உள்ளனர். இதுவரையும் வட கிழக்;கினைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் குதிக்க வில்லை. தற்பொழுது அப்பகுதியைச் சோந்தவர்கள் கொழும்பில் தேர்தல் குதிக்கும்போது இவர்களது வாக்கு வங்கிகளை நாம் மிக நுட்பகமாக பிரச்சாரம் செய்யமுடியும். எனவும் ஹமீட் கூறினார்.

வடக்கு மக்கள் கொழும்பு வாழ் மக்களது  வாக்குளைப் பெற்றுக்கொளள் கலாநிதி மரிக்கார் உதபுவார்கள் அதற்காக நான் பாடுபடுவேன் எனவும் மரிக்கார் தெரிவித்தார். முன்னாள் முஸ்லீம் கல்வி மாநாட்டின் செயலாளர் எம்.வை பாவா நாவசிற்காக கடுமையாக உழைப்பதாகவும் பொறியியலாளர் லத்தீப் பாடுபடுவதகாவும் இங்கு உரையாற்றினார்கள்.

2 comments:

  1. arasiyal oru nadaka medai.

    ReplyDelete
  2. NADIKHAIKAL KEETTAL NAMMAWAR VOTE POODA MATTARKALE

    ReplyDelete

Powered by Blogger.