ரணில் விக்கிரமசிங்கவை அடிக்க முயன்ற எம்.பி.
ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் முன் எடுக்கப்படவுள்ளன. எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
இன்று 05-02-2014 கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது அமைதியற்ற முறையில் செயற்பட்டமை மற்றும் எதிர்கட்சி தலைவரை தாக்க முற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலே ஒழுக்காற்று விhரணைகள் முன் எடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவிடம் Sfm வினவியது.
தாம் மத்துகம தொகுதியின் பிரதான அமைப்பாளர் என்றும், அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும் மேல் மாகாண சபைத் தேர்தலின் போது வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஒருவர் தொடர்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
குறித்த வேட்பாளர் ஒரு பாலியல் வன்புணர்வு சம்பவத்துடன் தொடர்பு கொண்டுள்ளார் என்று தெரிவித்து தாம் வாதாடியதாகவும் பாலித்த தெவரப்பெரும குறிப்பிட்டுள்ளார். எனினும் அவருக்கு வேட்புரிமை வழங்கப்பட்ட நிலையில் தாம், தமது புதல்வரை தேர்தல் களத்திலிருந்து விலக்கிக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் அகில விராஜ் காரியவசம் மற்றும் ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதுபற்றி கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, பாலித்த தெவரப்பெரும கலகம் ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டதாக தெரிவித்தார்.
இவர்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள்.........!!!
ReplyDelete