Header Ads



மஹிந்த ராஜபக்ஸ வழிகாட்டலின் உள்ளூராட்சித் துறையில் அபிவிருத்திகள் - அமைச்சர் அதாஉல்லா

(ஜே.எம்.வஸீர்)
   உள்ளூராடசி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கீழ் இயங்கும் புறநெகும செயற்திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில்  அமைந்துள்ள  ஹப்புத்தளை பிரதேச சபைக்கான நிருவாக கட்டிடத்திற்கான அடிக்கல் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் நடப்பட்டது.

இத்திட்டதிற்காக 50 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதுடன் இத்திட்டத்தில் மொத்தமாக 110 வருமாணம் குறைந்த உள்ளூராட்சி சபைகள் இனங்காணப்பட்டு அதனுள் 25வது இடத்திலுள்ள சபையாக ஹப்புத்தளை பிரதேச சபை காணப்படுகின்றது.  இன்  நிருவாக கட்டிட வேலைத்திட்டம் 2015 ஏப்;ரல் மாதம் நிறைவு பெறவுள்ளது.

இந்நிகழ்வல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இன்று உள்ளூராட்சித் துறையில் பலதரப்பட்ட அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் நோக்கம் உள்ளூராட்சி சபைகள் ஊடாக மக்கள் சிறந்த சேவையைப் பெற்றுக் கொள்வதேயாகும். கிராமத்தை கட்டியெழுப்புவதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற எண்ணக் கருக்கமைவாகவே புறநெகும திட்டம் எனது அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று வருமாணம் குநைத 110 சபைகளை இனங்கண்டு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் அவற்றிற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏனைய அபிவிருத்திப் பணிகளையும் எனது அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. நமது ஜனாதிபதி அவர்களும் கிராமத்தைக் கட்டியெழுப்ப மிகவும் முனைப்புடன் செயற்படுகின்றார். 

இதர்க்காக உள்ளுராட்சி சபைகளின் அர்ப்பணிப்பு மிகவும் முக்கியமானதாகும். எனவே சகல உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் உள்ளுராட்சி சபைகளை பலப்படுத்த முன்வருமாறு அமைச்சர்  தனதுரையில் வேண்டிக் கொண்டார். 



No comments

Powered by Blogger.