அரசியல்வாதிகளின் அதீத ஆசை
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகள் முதன்மை இலக்கங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு தமது பெயர்களின் முதல் எழுத்துக்களில் மாற்றத்தை ஏற்படுத்தப்படுத்தியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பதிவாளர் நாயகத்திடம் கருத்துக்களை கேட்டறியவுள்ளதாக, கெபே அமைப்பு தெரிவித்துள்ளது.
பிறப்புசான்றிதல் மற்றும் தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயருக்கு மாறாக தமது பெயர்களின் முதல் எழுத்துக்களில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளமை சட்டத்திற்கு முரணான விடயம் என, கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டார்.
தேர்தலில் சலுகைகளை பெற்றுக் கொள்வதற்கே இவ்வாறான விடயத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வேட்பாளர்களுக்கான விருப்பு இலங்கங்கள் வழங்கப்பட்ட சந்தர்பத்தில் இதை தவிர வேறு எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை எனவும் கெபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கூறினார்.
மேலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு அரச அதிகாரிகளை இணைத்து செயற்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகும் பட்சத்தில், வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பது தொடர்பிலும் தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை தேர்தல் தொடர்பில் அதிகபடியான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்ணாளிப்பு பணியகத்தின் தேசிய இணைப்பாளர் ரசாங்க ஹரிஸ்ஷந்திர தெரிவித்துள்ளார்.
Post a Comment