Header Ads



கல்முனை கல்வி அலுவலக வீதியின் அவலம் - ஜப்னா முஸ்லிமின் செய்திக்கு பலன்

(யு.எம்.இஸ்ஹாக்)

கல்முனை வலயக் கல்வி அலுவலக வீதியை செப்பனிட்டு தருவதாக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை உறுதியளித்துள்ளார் .  இந்த வீதியின் அவலம்   குறித்து கடந்த திங்கட் கிழமை (17) எமது ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் செய்தி வெளியிட்டு இருந்தது .  

இந்த செய்தியை அவதானித்த  அமைச்சர்  உதுமாலெப்பை  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரை தொடர்பு கொண்டு இந்த வீதியை நிர்மாணிப் பதற்கு  அமைச்சின் மாகாணப் பணிப்பாளருக்கு அனுமதி வழங்கி இருப்பதாக  தெரிவித்துள்ளார்.

விரைவில் இந்த வீதி நிர்மாணப் பணி  ஆரம்பிக்கப் படவுள்ளது . அமைச்சரின் இந்த உத்தரவை கேள்வியுற்ற கல்முனை வலயக் கல்வி பணிமனையில் கடமை செய்கின்ற அதிகாரிகள் தொடக்கம் ஊழியர்கள் ஜப்னா முஸ்லிம் இனணய தளத்துக்கும் ,கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பைக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.


No comments

Powered by Blogger.