Header Ads



காடுகளில் இடம்பெறும் குற்றங்களை கண்டுப்பிடிக்க ஆளில்லா விமானங்களை பாவிக்க தீர்மானம்

(Tm) வனாந்தரங்களில் இடம்பெறுக்கின்ற குற்றங்களை கண்டுப்பிடிப்பதற்காக ஆளில்லா விமானங்களை வானத்திற்கு அனுப்பி தரவுகளை பெற்றுக்கொள்வதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற யுத்த காலத்தில் புலிகள் இருந்த வனாந்தரங்களுக்கு மேலே சென்று தரவுகளை திரட்டிவந்து இராணுவத்திற்கு வழங்கிய 'கேலமா' என்றழைக்கப்படும் ஆளில்லா விமானமே இந்த செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படவிருக்கின்றது.

உடவல வனாந்தரத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கண்டறிவதற்காக இந்த விமானம் வானத்திற்கு மேலான வானத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. 

அந்த மங்களகரமான வைபவத்தில் வனஜீவராசிகள் அமைச்சர் விஜித்த விஜய முனி சொய்சா பங்கேற்றார் என்று வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.