Header Ads



அமீர் அலியும், கல்வி வலயமும்..!

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் தெரியும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் அமீர் அலி என்ற அரசியல் வாதி ஒருவரால் மாத்திரம் உரிமை கொண்டாடப்படும் கல்வி வலயம் என்று இருப்பினும் இக் கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்டதில் இருத்து மட்டக்களப்பு வாழ் முஸ்லிம்களுடைய கல்வி ரீதியான உரிமைகள் அவர்களுக்கு கிடைக்க பெற வேன்டிய முறையான உரிமைகள் கிடைக்கப்பெற்றமையினை  மட்டக்களப்பு முஸ்லிம் அரசியல் தலைமைகளும் கல்வி மாண்களும், படித்தவர்களும்,மாணவ சமூகமும் , பொது மக்களும் அறிந்த விடயம். எடுத்துகாட்டாக  மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் தேசியத்துக்கு முன்னூதாரனமாக இரு தடவைகள் கா.பொ.சாதாரண தரப்பரீட்சையில் தேசத்தில் முதலிடம் வலயத்தில் முதலிடம் ஓட்டமாவடி கோட்டம் என்ற பெயரை இன்றுவரை ஓட்டமாவடி கோட்டம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் வாதிகளில் பலர் ஒவ்வரு விதமான பேச்சு பாணியினையும் கொள்கை நடையினையும் கொண்டுள்ள அதே வேளையில் அமீர் அலி என்ற அரசியல் வாதி 'கல்வி, கல்வி ' என்றும் தீர்க்கப்படாத எல்லை நிர்னயம் காணி தொடர்பான பிரச்சினைகளை அடிக்கடி அன்று பாராளுமன்றத்திலும் அனைத்து நிகழ்வுகளிலும் குரல் எழுப்பியவர் என்பதை கல்குடா முஸ்லிம்  சமூகம் மறந்து விடாது  இது இவ்வாறு இருக்கையில் ஓட்டமாவடி பிரதேசம் அமீர்யின் கோட்டையாகும். ஓட்டமாவடி சபை அமீர் அலியின் சொல் பேச்சுக்கு இயங்கி வந்தது  அத்தளவில் அதிகளவான அக்கரையினை அமீர் அலி ஓட்டமாவடி பிரதேச சபையின் மீதும்  தவிசாளர் பிரதி  தவிசாளர் சபை உறுப்பினர் மீதும் நம்பிக்கை வைத்திருத்தார். 

 இது இவ்வாறு இருக்கையில் 28.01.2014 அன்று நடை பெற்ற  சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டு ' நிர்வாக சீர்கேட்டை நிவர்த்தி செய்தல்' என்று கட்டமிடப்பட்டு ஒரு கடிதம் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில்.......
' தங்களின் நிர்வாக எல்லைக்குட்பட்ட மட்டக்களப்பு  மத்தி வலயத்தின் கீழ் உள்ள ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் கீழ் உள்ள ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைகுட்பட்ட பாடசாலைகளில்  அண்மைக் காலமாக முறைகேடான நிர்வாக நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றதன் காரணமாக இப் பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தியில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளன,குறிப்பாக முறையற்ற ஆசிரியர் இடமாற்றங்கள், பாடசாலை அதிபர்களின் வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் இருத்தும் அவர்களை நியமிக்காதமை போன்ற பல்வேறு  பிரச்சினைகள் எமது பிரதேச சபைக்கு முன்வைக்கப்பட்டுள்ளதை அடுத்து  திட்டமிடப்படாத சீரற்ற நிர்வாக நடவடிக்கைகளையும்,இப்பிரதேச மக்களின் கல்வி மேம்பாட்டுக்குத் தடையாக உள்ள குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து இப்பிரதேசத்தின்  கல்வி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என சபையின் தவிசாளர் கே.பீ.எஸ் ஹமீட் கையொப்பம்மிட்ட ஒரு கடிதம்  மாகாண கல்வி பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதனை அடுத்து 
அமீர் அலி கவலையடைத்துள்ளார்.

 பிரதேச சபையின் தீர்மானமானமானது முற்றிலும் பிழையாக எடுக்கப்பட்ட தீர்மானம் என்று கற்ற சமூகம் கருதுகின்றது.

  இது வியடத்தில் அமீர் அலி மட்டக்களப்பு முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டினையும் அதன் அவிருத்தியினையும் விரும்புகின்ற தான் பிறந்த எனது ஊரில்  கல்வி ரீதியான திட்டமிடப்படாத சீரற்ற நிர்வாக நடவடிக்கைகள் இடம் பெறுவதாகவும், இப்பிரதேச மக்களின் கல்வி மேம்பாட்டுக்குத் தடையாக குறைபாடுகள் உள்ளதாகவும் ஓட்டமாவடி பிரதேச சபை சூட்டி காட்டிருப்பது மன வேதனை அளிக்கும் விடயமாக கருதுகின்றார்.

No comments

Powered by Blogger.