இஸ்லாமிய நாடுகளை நாடும் இலங்கை அரசு, முஸ்லிம்கள் விடயத்தில் பாராமுகம்.
(சத்தார் எம் ஜாவித்)
இலங்கையின் வரலாற்றில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கவைத்து தற்போது இலங்கை அரசையே சங்கடத்திற்கு உற்படுத்திய கடந்த மூன்று தஸாப்த கால யுத்தம் என்றால் அது எவராலும் மறக்க முடியாத ஒரு சம்பவமாகும். இன்று அது வேறு ஒரு ரூபத்தில் உருவெடுத்துள்ளது.
உடல், உள ரீதியாகவும் அரசியல், பொருளாதார ரீதியாகவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி மரண ஓலங்களுக்கும் இடம்பெயர்வுகளுக்கும் ஏன் வெளியில் இறங்கினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத காலமாக வடகிழக்கு மாகாண யுத்தம் காணப்பட்டது.
இவ்வாறு பயங்கரமாக காணப்பட்ட ஒரு யுகத்தினை 2009 ஆம் ஆண்டு யுத்த வெற்றி ஈட்டிக் கொடுத்தது. இதன் காரணமாக இலங்கை வாழ் மக்கள் ஒரு விடிவை நோக்கி பயனிக்கும்போது யுத்த வெற்றியின் போதான தாக்கங்கள் அரசாங்கத்திற்கு ஒரு தலையிடியாக மட்டுமல்லாது ஏன் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம் என்று Nசுர்லு;லும் திண்டாட்டமான நிலைமைகள் மறுபுறமாகக் காணப்படுகின்றன.
காரணம் யுத்த வெற்றியின்போது ஏற்பட்ட மனிதப் பலிகள் பாரியதொரு மனித உரிமை மீறல் என்ற குற்றச்சாட்டு சர்வதேச ரீதியாக இலங்கையை ஆட் கொண்டுள்ளதுடன் நாளுக்கு நாள் இலங்கையின் இறையான்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் பாரியதொரு சவாலாகவும் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருக்கின்றது.
நேரடியாகவே பாதிக்கப்பட்ட மக்களால் தமக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கைகளுடன் சர்வதேசம் வரை பல குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்ட வன்னமே உள்ளதுடன் அவர்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற விடயமும் முக்கியத்துவம் உடையதாக காணப்படுகின்றது.
யுத்தக் குற்றச் சாட்டுக்கள் என்ற விடயங்களை ஒரு காரணமாக வைத்து இன்று பல சர்வதேச நாடுகளும் வல்லரசுகளும் இலங்கையை ஒரு குற்றவாளியாக மனித உரிமைகள் இடம்பெற்ற ஒரு நாடு என்றும் அதற்கான தகுந்த நீதி விசாரணைகளும் அரசின் சரியான பதிலும் வேண்டும் என்ற இறுக்கமான செயற்பாடுகளால் இலங்கை அரசு இன்று திணறிப்போய் உள்ளதாக எதிர்க்கட்சிகள் அடிக்கடி கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறானதொரு தர்ம சங்கடமான நிலையில் எதிர்வரும் மாhச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பான விடயம் முக்கியத்துவம் உடையதாக மட்டுமல்லாது அதில் இருந்து தப்புவதற்கான பல முன் ஏற்பாடுகளைக் கூட அரசு அசுரவேகத்தில் செய்து வருகின்றது.
இதற்காக இலங்கை அரசானது இன்று பல நாடுகளின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்றாலும் ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் இலங்கை விடயத்தில் விடாப்பிடியாக இருக்கின்றன.
எந்த விதத்திலாவது இலங்கையை தமது குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தும் திட்டங்களை பல வழிகளிலும் மேற்படி நாடுகள் முடிக்கி விட்டுள்ளதுடன் அவ்விடயங்களில் அவதானத்துடனும் இருக்கின்றமையை நாளாந்தம் ஊடகங்கள் வாயிலாக அறியக் கூடியதாகவுள்ளது.
இவ்வாறானதொரு சூழ் நிலையில் இலங்கைக்கு கைகொடுக்கும் நாடுகளில் பல முஸ்லிம் நாடுகள் என்றால் அதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை.
பல முஸ்லிம் நாடுகளே இலங்கையின் பொருளாதார மற்றம் அபிவிருத்தி விடயங்களுக்கு பாரிய முதலீடுகளை செய்து வருவதுடன் பணமாகவும், பொருட்கள் வடிவிலும் மற்றும் சேவை அடிப்படையிலும் பிரதி பலன்களை எதிர்பார்க்காத உதவிகளை மேற் கொண்டு வருகின்றன.
2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட மனித உரிமைகள் மீறல் குற்றச் சாட்டுகள் தொடர்பான குற்றப் பிரேரணைக்கு மேற்கத்தைய நாடுகள் வாக்களித்த போதிலும் பல முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராகவும் இலங்கைக்கு ஆதரவாகவும் வாக்களித்தன.
இவ்வாறு வாக்களித்தமைக்கு இலங்கையின் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள் மேற்கொண்ட பிரச்சார நடவடிக்கைகளும், முஸ்லிம் நாடுகள் இடத்தில் அவர்கள் வேண்டிக் கொண்டதற்கும் இனங்கவே சென்ற முறை ஆதரவு கிடைத்தது.
எனினும் இம்முறை அந்த ஆதரவுகள் கிடைக்கும? என்ற சந்தேகங்கள் பல முஸ்லிம் நாடுகள் இடத்தில் தற்போது காணப்படுகின்றது. காரணம் கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் மியன்மார் முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மை பௌத்தர்களால் மேற் கொள்ளப்பட்டு வரும் தொடரான விரும்பத்தகாத பல சம்பவங்கள் இலங்கை விடயத்தில் முன்னிலையில் உள்ளது.
இலங்கையைப் பொருத்தவரை கடந்த இரு வருடங்களில் பள்ளிவாசல்கள், சமய நிறுவனங்கள் பல இனவாத பெரும்பான்மைக் கும்பல்களால் தாக்கப்பட்டும், உடைக்கப்பட்டும் உள்ளதுடன் ஏனைய சமய ரீதியான விடயங்களிலும் மூர்க்கத்தனமான உள்ளீடுகள் இலங்கை வாழ் முஸ்லிம்களை மட்டுமல்லாது சர்வதேசம் வரை கவலையையும், விசனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஒரு பூர்வீக சிறுபான்மை மக்களின் சமய மற்றும் மத உணர்வுகளுக்கு புதிதாக முளைத்து ஒரு இனவாதக் கும்பல்களின் சவால்விடும் விளையாட்டுக்களை கட்டுப்படுத்த அல்லது தண்டிக்காது ஒரு இனத்தின் மீது அவர்களின் தான்றோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு இடம் வழங்கிய அரசினை எவ்வாறு முஸ்லிம்களும், முஸ்லிம் நாடுகளும் ஆதரிக்கும்?
அன்மைய காலமாக இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் உடல், உள ரீதியாகவும் பெரும்பான்மை இனவாதக் கும்பல்களின் இரத்தப்பசிக்கு இலக்கான முஸ்லிம்களின் விடயத்தில் முஸ்லிம் சமுகம் அரசிற்கு பல ஆதாரபூர்வமான விடயங்களை சுட்டிக் காட்டிய போதிலும் அவற்றை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக எடுத்துவிட்டு இன்று முஸ்லிம்களிடமும் முஸ்லிம் நாடுகளிடமும் தமக்கு உதவி கேட்பது வெட்கித் தலை குணியும் விடயமாகவே உள்ளதாக முஸ்லிம் புத்தி ஜீவிகள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
கடந்த வருட ஜெனீவா விடயத்தில் தப்பிய இலங்கை அதன் பின்னராவது இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும் அது நடக்கவில்லை. மாறாக பொதுபல சேனா, இராவணபலய உள்ளிட்ட இனவாதக் கும்பல்கள் தமது அடாவடித்தனங்களை முஸ்லிம்கள் மீது தொடர்ந்த வன்னமேயுள்ளனர்.
அவர்களால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட விடயங்களுக்கு எதிராக அரசு சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை ஏன் பல சம்பவங்களில் நேரடியாக சம்பந்தப்பட்ட பலரை ஆதாரங்களுடன் அடையாளப் படுத்தியபோதிலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் இல்லை.
இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல விடயங்களை பல முஸ்லிம் நாடுகள் உண்ணிப்பாக கவனித்த வன்னமேயுள்ளன. இவ்வாறு அந்நாடுகள் அவதானித்த போதிலும் கூட அரசு அவற்றை கண்டு கொள்ளாததையிட்டு அந்நாடுகள் தற்போது அதிர்ப்தி கொண்டுள்ளன.
இலங்கையைப் பொருத்தவரை பல முஸ்லிம் அமைச்சர்களும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசில் அங்கம் வகித்தபோதிலும் ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் முஸ்லிம்கள் மீதான எதிர்ப்புக்களுக்க குரல் கொடுகாதது இன்று இனவாதிகளின் கைகள் ஓங்குவதற்கும் முஸ்லிம்களின் சமயத்தின் மீது பல தடைகள் வருவதற்கும் வழிவகுத்துவிட்டது.
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதற்கு ஒத்ததாக இன்று ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் கலங்குவதும் பலர் தமது சுகபோகங்களுக்காக மௌனிகளாக பதுங்குவதும் முழு இஸ்லாத்திற்கும் துரோகம் செய்யும் கைங்கரியங்களே.
விசமிகளின் இஸ்லாத்திற்கு எதிரான செயற்பாடுகளை அரசுக்கு சுட்டிக்காட்டி கட்டுப்படுத்துவதற்கு நாதியற்ற முஸ்லிம் தலைமைகள் தொடர்ந்தும் எதிர்வரும் தேர்தல்களில் கூட முழுப் பூசணிக் காயை மறைப்பதுபோல் இஸ்லாத்திற்க எதிரான செயற்பாடுகளை மறைப்பதற்கு உயர் மட்டத்தில் இருந்து ஆலோசனைகளைக் கூடப் பெற்றள்ளதாகவும் அதன்படி சாதர்யமாக எதிர்வரும் இரு மாகாண சபைத் தேர்தலிலும் முஸ்லிம்களின் வாக்குகளை கொள்ளையடிக்க முனைவது முஸ்லிம்கள் மத்தியில் வெகுவாக இனங்கானப் பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
கடந்த வருடம் முஸ்லிம் நாடுகளின் பிரதி நிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்து இலங்கை முஸ்லிம்களின் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் முஸ்லிம்கள் மீது கட்டவுழ்த்து விடப்பட்டுள்ள தீய செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரிக்கைகள் விடப்பட்ட போதெல்லாம் அவை இன்று காற்றடைத்த பையாக காணப்படுகின்றது.
இலங்கைக்கு இனி முஸ்லிம் நாடுகளின் ஆதரவு சந்தேகத்திற்கு இடமான விடயங்களே அதிகம் காணப்படுகின்றன.
Insha Allah appadiye nadakkatum
ReplyDeleteMuslims in Srilanka made a problem for themselves. It is the first is Jamiathul ulamam, second muslim countries. third muslims in srilanka who foolishly gone against one of world most powerful nation America. Muslims should not support separation. but should not go against international community, America and the west wanted to punish srilanka. but because of muslims in srilanka and muslim countries their intention was not materialized. so they want to punish Muslims who agitated against America having worn white Muslim dress. so present day anti Muslim activities are made in west. so now west (Norway) and others planning to teach a good lesson. so Norway BBS even tigers are in one group who's intention is punish muslims. these three party held the secret meeting in oslo.and having close conection. so it is the Muslims who gone against west anticipating western help is laughable. a last I cursed Jamiathul ulama who went to UNO against UNO, and to America against America. so for that we are paying a price. It is our foolishness. even turmoil in the middle east also because of Srilanka that muslim countries gone against west and America Supporting Srilanka.
ReplyDelete