சமூக ஊடகப் பாவனை குறித்து இளைஞர் யுவதிகள் அறிவூட்டப்படுவது அவசியம்
(எம்.எம்.ஏ.ஸமட்)
சமூக ஊடகப் பாவனை குறித்து இளைஞர் யுவதிகள் அறிவூட்டப்படுவது அவசியமென தகவல் தொடர்பாடல் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் கலாநிதி சரித்த ஹேரத் தெரிவிக்கிறார்.
அண்மைக்காலமாக முகநூல் போன்ற சமூக ஊடகங்களினால் ஏற்படும் தற்கொலைகள் மற்றும் விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சுமூக ஊடகங்களின்; முறைகேடான பாவனையின் காரணமாக இரு மாணவிகள் தற்கொலை புரிந்துள்ளனர். விரும்பத்தகாத முறையில் முகநூல் மற்றும் ஏனைய சமூக ஊடகங்கள்; ஒரு சில இளைஞர்களினால் பயன்படுத்தப்படுவதே இத்தகைய துரஷ்டவசமான நிகழ்வுகளுக்குக் காரணமாகவுள்ளன.
இருப்பினும், தற்கொலைகள் அவற்றுக்கு பரிகாரமாக அமையாது. ஒரு சிலரின் முறைகேடான இணைத்தளப் பாவனைக்கான பரிகாரமாக தற்கொலை புரிவதோ அல்லது வேறு நடவடிக்கைகளை எடுப்பதோ தீர்வாகது என செயலாளர் குறிப்பிடுகிறார்.
இன்று சமூக ஊடகங்கள்; நம்நாட்டில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் சமூங்களில் பிரபல்ய மடைந்துள்ளன. இருந்தும் சமூக ஊடகங்கள்; முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
சமூக ஊடகங்கள்; தொடர்பான விழிப்புணர்வும் அவற்றைப் பயன்படுத்துவது தொடர்பான அறிவூட்டலும் இளைஞர்களுக்கு இன்று அவசியமாகவுள்ளது.
அதுமாத்திரமின்றி, பாடசாலை மாணவர்களின் பாடத்திட்டத்திலும் கனணியின் பயன்பாடு மற்றும் நவீன ஊடக அறிவு குறித்த விடயங்கள் உள்வாங்கப்படுவதானது சிறந்த பயனையும் பாதுகாப்பையும் அளிக்குமென அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும், சமூக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் என்பவற்றின் பாவனை தொடர்பிலானா விழிப்புணர்வு நடவடிக்கைளும் செயற்பட்டறைகளும் அதிகரிக்கப்படுவதன் மூலம் இளைய தலைமுறையினரை அவற்றின் விரும்பத் தகாத பாவனையிலிருந்து பாதுகாப்பதுடன், சமூக ஊடகங்களினால் அவர்களை நன்மையடையச் செய்ய முடியுமெனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாடசாலை மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகள் முடியும் வரை முகநூல் போன்ற சமூக இணையத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோகன குறிப்பிடுகிறார். அத்துடன், பேஷ் புக் போன்ற சமூக இணையத்தளங்களில் தங்களது தனிபட்ட விபரங்களைத் தரயிறக்கம் செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுவது பாதுகாப்பானது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment