அரசாங்கத்தின் பங்காளி என்பதால், சமூகத்திற்கு எதிராக தொடுக்கப்படும் சதிகளை பார்த்துக் கொண்டு சும்மா இருந்ததில்லை
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
எமது நாட்டு முஸ்லிம்களுக்கு கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் அரசுக்குள் இருந்து கொண்டு நாம் போராட்டங்களை நடத்தி்னோம்.ஜனாதிபதியினை சந்தி்த்து இந்த அநியாயங்கள் தொடர்பில் விளக்கப்படுத்தி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தோம். அரசாங்கத்தின் பங்காளி என்பதால் எமது சமூகத்திற்கு எதிராக தொடுக்கப்படும் சதிகளை பார்த்துக் கொண்டு ஒரு போதும் சும்மா இருந்ததில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சரமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் நவாஸ் முஸ்தாபவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்று நேற்று இரவு தெஹிவளை எஸ்டிசி மண்டபத்தில் இடம் பெற்றது.இதில் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா,கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்,கொழும்பு மத்திய தொகுதி அமைப்பாளர் றியாஸ் சாலி உட்பட பலரும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.
மேலும் அமைச்சர் இங்கு பேசும் போது-
இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் தலைமைத்துவம் எம்மை விமர்சிக்க ஆரம்பித்துள்ளது.அந்த கட்சியினை அழிப்பபதற்காக நாங்கள் செயற்படுவதாக குற்றச்சாட்டினை முன் வைக்கின்றனர்.நாங்கள் ஒன்றை சொல்லி வைக்க விரும்புகின்றோம்.எமக்கு எவ்வித தேவைப்பாடுகள் இல்லை வேறு கட்சிகளை அழிப்பதற்கு.இன்று வடக்கு மற்றும் கிழக்கிற்குள் எமது கட்சி 6 மாகாண சபை பிரதி நிதித்துவத்தை பெற்றுள்ளது.61 நகர,பிரதேச சபைகளின் உறுப்பினர்களை கொண்டுள்ளது.4 சபைகளின் தலைவர்கள,4 பிரதி தலைவர்கள் எமது கட்சியினை சார்ந்தவர்கள் கொண் டுள்ளனர்.
இவ்வாறான அரசியல் அதிகாரங்களை கொண்டுள்ள நாம் வடக்கிற்கும்,கிழக்கிற்கும் வெளி்யே வாழும் சிறுபான்மை சமூகங்களினது தேவைகள் மற்றும் அபிலாஷைகள் தொடர்பில் கவனம் செலுத்த முற்பட்ட போது அதனை பிழையான கண்ணோட்டத்தில் காண்பிக்க முயற்சிக்கின்றனர்.அரசியல் மூலம் இம்மக்களுக்கு எதையெல்லாம் பெற்றுக் கொடுக்க முடியுமோ,இதனையே எமது கட்சி செய்கின்றது.இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியாதவர்கள் பிழையாக மக்களை வழி நடத்தப்பார்க்கின்றார்கள்.
தலைநகரில் வாழும் இந்த மக்கள் எதிர் கொள்கின்ற சவால்களை முறியடிக்க,இவர்களது பிரச்சினைகளை பேச வேண்டிய இடங்களில் பேசாது பேசா மடந்தையாக இருக்கின்ற அரசியல் செயற்பாடுகளை கண்டு,தற்போது காணப்படுகின்ற இந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காகத்தான் எமது கட்சி இன்று கொழும்பில் போட்டியிடுகின்றது.
வேட்பாளர்கள் தெரிவின் போது பலர் தங்களை உள்வாங்குமாறு வந்தார்கள்.அவ்வாறான தொரு சூழ் நிலையில் நாம் மிகவும் நிதானமாக சிந்தித்து பல இரவுகள் கலந்துரையாடி சிறந்த சமூகத்தின் விமோசனம் தொடர்பில் கவனம் செலுத்தக் கூடிய வேட்பாளர்களை நாம் இறக்கியிருக்கின்றோம்.
இன்று இங்கு வந்திருக்கின்றவர்கள் யாழ்ப்பாணம், மன்னார்,கல்முனை,புத்தளம், கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களை சேர்ந்த கொழும்பில் தமது வாக்குப்பதிவுகளை கொண்டுள்ளவர்களாக கானுிகின்றேன்.இந்த கட்சியின் இலட்சியம் கொழும்பு மாவட்ட சிறுபான்மை சமூகத்தின் கல்வி மற்றும் பொருளாதார விமோசனத்துடன்,மக்களின் உரிமைகளை பாதுகாப்பதாகும்.இதற்கான சந்தர்ப்பம் இந்த தேர்தல் மூலம் எமக்கு கிடைக்கவுள்ளது.அதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்களது பங்களிப்புக்கள் அமையும் என நம்புகின்றேன்.
வடக்கில் சிதைந்து போயுள்ள சமூகங்களின் உறவுகளை கட்டியெழுப்ப தலைநகரில் வாழும்,தமிழ்களும்,முஸ்லிம்களும் ஒன்றுபட்டு எமது கட்சியில் போட்டியிட்டுள்ள வேட்பாளர்களை ஆதரித்து வெ்ற்றி பெறச் செய்துள்ளார்கள் என்ற செய்தியினை இந்த தேர்தல் முடிவுகள் காட்ட வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
Post a Comment