Header Ads



ஆபரேசன் இல்லாமல் ‘பேஷ் மேக்கர்’ கருவியை இதயத்தில் பொருத்தி சாதனை

ஆபரேசன் இல்லாமல் ‘பேஷ் மேக்கர்’ கருவியை இதயத்தில் பொருத்தி இந்திய டாக்டர் சாதனை படைத்துள்ளார்.

இதய துடிப்பை சீராக்க நோயாளிகளின் உடலில் ‘பேஷ் மேக்கர்’ என்ற கருவி பொருத்தப்படுகிறது. தற்போது ஆபரேசன் மூலம் அது பொருத்தப்பட்டு வருகிறது.

ஆனால் ஆபரேசன் இல்லாமல் ‘பேஷ்மேக்கர்’ கருவியை இதயத்தில் அமெரிக்க வாழ் இந்திய வம்சாளி டாக்டர் ஒருவர் பொருத்தியுள்ளார். அவரது பெயர் விவேக் ரெட்டி. இவர் நியூயார்க்கில் உள்ள ‘தி மவுண்ட் சினாஸ்’ ஆஸ்பத்திரியில் பணிபுரிகிறார்.

தற்போது இதய நோயாளிகளின் உடலில் பொருத்தப்படும் ‘பேஷ் மேக்கர்’ ஈயத்தால் தயாரிக் கப்பட்டது. ஆனால் இது சில்வர் மெட்டலால் தயாரிக்கப்பட்ட சிறிய ‘டியூப்’ வடிவிலானது.

இது வழக்கமான ‘பேஷ்மேக்கர்’ கருவியை விட 10 மடங்கு மிகச்சிறியதாகும். இக்கருவியை அடிவயிற்றுக்கும், தொடைக்கும் இடையே செல்லும் ரத்தக் குழாய் மூலம் இதயத்துக்கு செலுத்தி டாக்டர் விவேக் ரெட்டி இச்சாதனை படைத்துள்ளார்.

இந்த அதி நவீன ‘பேஷ் மேக்கர்’ கருவி ‘நானோ’ டைப் ஆகும். இதை செயின்ட் ஜூட நிறுவனம் தயாரித்து பல பரிசோதனைக்கு பிறகு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு ‘லெட்லெஸ்–2’ என பெயரிட்டுள்ளனர். இக்கருவி வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளதன் மூலம் அமெரிக்கா, கனடா, ஐரோப்பாவில் 670 பேருக்கு பொருத்தப்பட உள்ளது. இவை 50 ஆஸ்பத்திரிகள் மூலம் நோயாளிகளின் உடலில் செலுத்தப்பட உள்ளது.

‘‘சர்வதேச அளவில் தற்போது 40 லட்சம் இதய நோயாளிகளுக்கு ‘பேஷ்மேக்கர்’ கருவி மூலம் உயிர் வாழ்கின்றனர். ஆண்டுக்கு 7 லட்சம் பேர் இக்கருவி பொருத்தப்பட்டு வருகிறது.

இருதய நோயாளிகள் பெருகி வரும் நிலையில் இந்த அதிநவீன ‘பேஷ் மேக்கர்’ கருவி ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.

No comments

Powered by Blogger.