யாழ்ப்பாண முஸ்லீம்கள் இந்திய விட்டுத்திட்டம் தொடர்பில் குழப்பமடையத் தேவையில்லை
(பா.சிகான்)
இந்திய விட்டுத்திட்டம் தொடர்பில் யாழ் முஸ்லீம்கள் குழப்பமடையத்தேவையில்லை நம்பிக்கையோடு இருங்கள் என யாழ் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
யாழ்-கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிபருக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த தினங்களில் நடைபெற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ம் திகதி யாழ்-கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் யாழ் முஸ்லீம்களின் 317 இந்திய விட்டுத்திட்டத்திற்கான
விண்ணப்பங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடாக அரசாங்க அதிபரிடம் கையளித்து 9 மாதங்கள் கழிந்த பின்னர் 3ம் கட்ட வீட்டுத்திட்டம் ஆரம்பமான நிலையில் இதன்போதாவது யாழ் முஸ்லீம்கள் உள்வாங்கப்பட்டுள்ளனரா? என அரச அதிபரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்க பதிலளித்த அரச அதிபர் சு.அருமைநாயகம் யாழ் மாவட்டத்திற்கான இந்திய விட்டுத்திட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் இலங்கை செஞ்சிலவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
திட்டத்தில் தமிழர்கள் ,முஸ்லீம்கள் என பாகுபாடின்றியே தெரிவுசெய்யப்படுகின்றனர்.
முஸ்லிம்கள் செறிவாக வாழும் ஜே-84 கிராம அலுவலகர் பிரிவில 49 விண்ணப்பங்களும்,ஜே-87 கிராம சேவகர் பிரிவில் 185 விண்ணப்பங்களும்,ஜே-88 கிராம சேவகர் பிரிவில் 58 விண்ணப்பங்களும் மேலதிக பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
இதன் போது சம்மேளனப்பிரதிநிதிகள் வீட்டுத்திட்டம் தொடர்பான மகஜர் ஒன்றினையும் அவ்விடத்தில் வைத்து கையளித்தனர்.
Post a Comment